பக்கம்:பராசக்தி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-51- கோவில் கூடாது என்பதற்காக அல்ல கோவில் கொடிய வரின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக பூசாரி யைத் தாக்கினேன் அவன் பக்தன்என்பதற்காக அல்ல பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக (நடுவில் ஒரு வக்கீல் எழுந்திருக்கிறார்] உனக்கேன் இவ்வளவு அக்கரை? உலகத்தில் யாருக்கு மில்லாத அக்கறை என்று கேட்பீர்கள் நானே பாதிக்கப் பட்டேன் நேரடியாகப் பாதிக்கப்பட்டேன்! சுயநல மென் பீர்கள் என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது ஆகாரத்திற்காக அழுக்கைச்சாப்பிட்டுத் தடாகத்தை சுத்தப் படுத்துகிறதே மீன் அதைப்போல் என்னைக் குற்றவாளி குற்றவாளி என்கிறார்களே இந்தக் குற்றவாளியின் வாழ்க் கைப் பாதையிலே கொஞ்சதூரம் பின்நோக்கி நடந்து பார்த் தால் அவன் கடந்துவந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்குப் பார்க்கமுடியும் பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில் படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந் திருக்கின்றன தென்றலைத் தீண்டியதில்லை நான் ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன் கேளுங்கள் என் கதையை நீதிபதி அவர்களே. தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவுசெய்து கேளுங்கள்! தமிழ் நாட்டினிலே இத்திருவிடத்திலே பிறந்த வன் நான், பிறக்க ஒருநாடு, பிழைக்க ஒரு நாடு தமிழ் நாட்டின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ரங்கூன் அது என் உயிரை வளர்த்தது என்னை உயர்ந்த வனாக்கியது திருமண கோலத்திலிருந்த என் தங்கையைக் காணவந்தேன் மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்ற வாளிக்கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜாலி இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன் பணப்பெட்டியை : பறிகொடுத்தேன் பசியால் மெலிந்தேன் நலிந்தேன் கடைசியில் பைத்தியமாக மாறினேன். காண வந்த தங்கையைக் கண்டேன் கண்ணற்ற ஓவியமாக ஆம்! கைம்பெண்ணாக, தங்கையின் பெயரோ கல்யாணி மங்கள கரமான பெயர்! ஆனால் கழுத்திலே மாங்கல்யமில்லை செழித்து வளர்ந்த குடும்பம் சீரழிந்து விட்டது. கையிலே பிள்ளை 1 கண்களிலே நீர்! கல்யாணி அலைந்தாள் கல்யாணிக்காக நான் அலைந்தேன், கல்யாணிக்குக் கருணை காட்டினர் பலர் அவர்களிலே காளையர் சிலர் அவளுடைய காதலைக் கேட்டனர். கொலை வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கி றானே இக்கொடியவன் வேணு இவன் பகட்டால் தங்கையை கற்பழிக்க முயன்றான் நான் தடுத்திராவிட்டால் கல்யாணி அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பாள். கடவுள் பக்தர்களும் கல்யாணிக்குக் கருணைகாட்ட என் முன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/52&oldid=1705915" இலிருந்து மீள்விக்கப்பட்டது