பக்கம்:பராசக்தி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-52- வந்தார்கள் பிரதி உபகாரமாக அவள் கடைக்கண் பார்வை யைக் கேட்டனர். அதில் தலையானவன் இந்தப் பூசாரி கல்யாணியின் கற்பை காணிக்கையாக கேட்டிருக்கிறான் பராசக்தியின் பெயரால் உலகமாதாவின் பெயரால் கல்யாணி உலகத்தில் புழுவாகத் துடித்தபடியாவது உயிரோடிருந் திருப்பாள் அவளைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியது இந்த பூசாரிதான் தன் குழந்தையை இந்த இரக்கமற்ற உலகத்தில் விட்டுச் செல்ல அவள் விரும்பவில்லை தன் குழந்தை ஆதரவற்றுத் துடித்துச் சாவதைக்காண அவள் விரும்பவில்லை அவளே கொன்று விட்டாள். விருப்பமானவர்களைக் கொல்வது விந்தையல்ல உலக. உத்தமர்காந்தி, அதஹிம்சாமூர்த்தி ஜீவகாருண்யசீலர் அவரே நோயால் துடித்துக்கொண்டிருந்த கன்றுக்குட்டியைக் கொன் றுவிடச் சொல்லியிருக்கிறார் அது (கஷ்டபடுவதைக் காணச் சகியாமல். அந்த முறையைத்தான் கையாண்டிருக்கிறாள் கல்யாணி, இது எப்படி குற்றமாகும்? வெளிநாட்டிலிருந்து. திரும்பிய ஒரு தமிழனுக்கு வாழவழியில்லை தமிழ் நாட்டில் பிறந்த பெண்ணுக்கு வாழ்வதற்கு தக்க பாதுகாப்பில்லை ஆனால் என் தங்கை கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் கோடீஸ்வரன் வீட்டுப்பள்ளியறையிலே ஒருநாள் மானத்தை விலை கூறியிருந்தால் மாளிகைவாசியின் மடியிலே ஒருநாள் இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை, இதைத்தானா இந்த நீதி மன்றம் விரும்புகிறது பகட்டு என் தங்கையை மிரட்டியது- பயந்து ஓடினாள் பணம் என் தங்கையைத் துரத்தியது- மீண்டும் ஓடினாள் பக்தி என் தங்கையை பயமுறுத்தியது- ஓடினாள், ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்க வேண்டும், வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும் இன்று சட்டத்தை நீட்டுவோர் செய்தார்களா? வாழவிட்டார்களா என் கல்யாணியை? வக் குற்றவாளி யார் வழக்கிற்கோ வக்கீலாகமாறுகிறார். குண : யார் வழக்கிற்குமில்லை. அதுவும் என் வழக்குத் தான், என் தங்கையின் வழக்கு தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதில் என்ன தவறு? கல்யாணி தற்கொலை செய்துகொள்ள முயன்றது ஒரு குற்றம் குழந்தையைக் கொன்றது ஒரு குற்றம் நான் பூசாரியைத் தாக்கியது ஒரு குற்றம் இத்தனை குற்றங் களுக்கும் யார் காரணம் கல்யாணியை கஞ்சித்தில்லாமல் அயை விட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா அல்லது விதி யின் யெரைச்சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின்குற்றமா பணம் பறிக்கும் கொள்ளைக்கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா அல்லது பஞ்சத்தை மஞ்சத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/53&oldid=1705916" இலிருந்து மீள்விக்கப்பட்டது