பக்கம்:பராசக்தி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-58- திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா? கட கடவுளின் பெயரால் காமலீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட் டிலே நடமாடவிட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலசேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப்பக்கம் புரட்டி னாலும் காணப்படும் பாடம் பகுத்தறிவு பயனுள்ள அரசியல் தத்துவம். நீதி : குற்றவாளியைத் தண்டிக்க தனிப்பட்டஎவருக்கும் உரிமை கிடையாது உன்னுடைய வாதம் சாக்காரையோ, சட்டத்தையோ அவமதிப்பதாக இருக்கக்கூடாது நடந்ததை சொல்லத்தான் உனக்கு உரிமை கொடுக்கப்பட்டதே தவிர அனாவசியமா எதையும் பேசக்கூடாது உன்னிடம் கேட்ட கேள் விகளுக்கு மட்டும் பதில் சொல் கல்யாணி உண்மையி லேயே உன் தங்கைதானா? குண : இந்தக்கேள்வி தங்களுக்கே வேடிக்கையாக இல்லை நீதி : சரி கல்யாணியை வரச்சொல் நீதி : இவன் உன் அண்ணனா? கல் : இல்லை கிறுக்கண்ணாஎன்று கூப்பிடுவேன்! சொந்த அண்ணன் கிடையாது. குண : கல்யாணி நான் உன் சொந்த அண்ணன்!. நான் தான் குணசேகரன். நீதி : என்னம்மா? கல் : அவருக்கு கொஞ்சம் பைத்தியம்! குண : ஆம்! பைத்தியம் தான் பைத்தியக்காரனாக நடித் தேன் என் தங்கையின் வாழ்வை வேதனை படுத்தக்கூடாது என்பதற்காக நீதிபதி அவர்களே தயவு செய்து இதை நம்பி விடாதீர்கள் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். நீதி : அதைப்பற்றி நீபேசக்கூடாது, அது குழந்தையை கொன்ற குற்றம் (விமலா குழந்தையுடன் வந்து) விம : இல்லை! இல்லை! கல்யாணி குற்றம் செய்யவில்லை குழந்தையும் கொல்லப்படவில்லை. இதோ இருக்கிறது கல் யாணியின் குழந்தை. குண : விமலா விம : குணா நீதி : குழந்தை எப்படி உன்னிடம் கிடைத்தது. விம : நிலவுகால இரவில் நான் வழக்கமாக ஆற்றில் படகில் செல்வது வழக்கம். அப்போது இந்தக் குழந்தை என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/54&oldid=1705917" இலிருந்து மீள்விக்கப்பட்டது