பக்கம்:பராசக்தி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_56- குண: வாங்க...அம்மா! ஒரு காலணாவுக்கு இட்லி தர்றீங்களா? ஏன் சிரிக்கிறீங்க? பைத்தியக்காரன்னு நினைச் சிட்டியா மந்திரி நமது மாநகர் தன்னிலே மாத மும்மாரி மழை பெய்கிறதா டும் ! டும் ! டும்! (பழையவை நினைவூட்டுகிறான்) ஞான: சரிதான்! அப்போ நீங்களெல்லாம் இங்கேயே இருங்க நான் வர்றேன். சேகர்: ஏன் தம்பி நீ எங்கே போறே நீங்க ஞான நமக்கும் உங்களுக்கும் சரிபட்டு வராது. யங்களா ஆபீஸ்னு பழகிட்டீங்க. நான் பரதேசி மடம், ஆலமரத்தடி இப்படி பழகிட்டேன் அங்கேயே போகிறேன். கல்: அப்போ நானும் வர்றேன். குண: நானும் புறப்பட்டுட்டேன் அப்படின்னா. விம : எல்லோருமே பரதேசி மடத்துக்கு போறதுக்குப் யதில் பரதேசிகளெல்லாம் பங்களாவுக்கு அழைக்கிறது தான் நல்லது. சேகர்: ஆமாம்! அதுதான் சரியான யோசனை; ஞான சேகரா உன் கொள்கைப்படி பங்களாவாசி பரதேசியாக மாறக்கூடாது! பரதேசிகள் பூராவையும் பங்களாவாசியாக மாற்றுகிறதுதான் நல்லது. ஞான: அப்படின்னா நான் போய் எல்லோரையும் கூட் டிட்டு வர்றேன். (பேதமின்றி பாடுகின்றனர்) காட்சி-43 (சாந்தநாயகி அனாதை விடுதி திறக்கப்படுகிறது) எல்லோரும் வாழ வேண்டும்-உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும். நல்லோர்கள் எண்ணமிது-முத்தம்மா நல்லற வாழ்வுமிதே (எல்லோ கல்லாதா ரென்றெருவர் நம்மிடையே இல்லாம லாக்க வேண்டும் கொல்லாமை போற்ற வேண்டும் மனிதர்கள் கூட்டுறவாக வேண்டும் (எல்லோ இல்லாதாரை படைத்தான் என்றொருவன் இருந்தால் அழியட்டுமே இல்லார்கள் உள்ளாரென்று -முத்தம்மா ஏனிந்த வேற்றுமைகள் (எல்லோ -சுபம்- - கோபி பிரிண்டர்ஸ், சென்னை - 1. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/57&oldid=1705920" இலிருந்து மீள்விக்கப்பட்டது