பக்கம்:பராசக்தி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-5- ஞான : அண்ணிக்குத் தானப்பா சிருக்கும். இல்லையண்ணா...! முதல்லே தெரிஞ் (சந்திரசேகரன் அவன் மனைவி சரஸ்வதியினுடைய தந்தையின் போட்டாவைப் பார்த்து கண்ணீர் விடுகிறான்) சரஸ் : தங்கச்சிக்குக் கல்யாணம்! இப்படி திடீர்னு வருத்தப்படுறீங்க சந் : இல்லை...ஒங்க அப்பா படத்தைப் பார்த்தவுடன் என்னமோ மாதரி இருந்திச்சி மனமே மாறிடுச்சி நம்ம கல்யா ணத்துக்கு அவரு இருந்து எவ்வளவோ நல்லா நடத்தினாரு இப்ப இந்தக் கல்யாணத்துக்கு இல்லேன்னுதான்... சரஸ் : அதுக்குத்தான் ஒங்க அப்பா இருக்காரே சந் : என்ன இருந்தாலும் சீரழிந்த குடும்பத்தைச் செல் வமாக்கினவரு அவருதானே சின்ன வயசிலே இருந்து அவரு டைய ஆதரவிலேதானே வளர்ந்தோம். மடியிலே விளை யாண்டோம். (காப்பி குடிக்க உட்காருகின்றனர்) ஞான : குணாவைப் பார்த்து டேய்! கீழே வைடா பல் விளக்கிறதுக்குள்ள என்னடா காப்பி. சந்: ஞானசேகரா! நீ சும்மா இருப்பா நீ சாப்பிடு தம்பி. குண: கல்யாணிக்கு என்ன பரிசு கொடுக்கிறது? சந்: கல்யாணிக்காக கொண்டிருக்கின்றன. நம்ம இதயங்களே துடித்துக் இதைவிட நல்ல பரிசு நம்மால் வேறென்ன அளிக்க முடியும். (போன் மணி அடிக்கிறது) ஹலோ-சந்திரசேகரன் ஸ்பீக்கிங் பேசு: டிக்கட் கேட்டீங்களாமே? சந்; ஆமாம்... பேசு: எத்தனை? சந்: போர்... நாலு பேசு: நாலா முடியாதே சார்! சந்: முடியாதா? எப்படியாவது முயற்சி செய்யுங்க சார் ப்ளீஸ் - சரஸ் : பெரிய பாரிஸ்டர் இதுக்கு எத்தனை ப்ளீஸ் போட வேண்டியதிருக்கு. பேசு: உங்களுக்கு தெரியாதா? வார் டைம்... சந் : வார் டைம் சரி சார்! எங்க குடும்பத்துக்கு முக்கிய மான மேரேஜ் அவசியம் எல்லோரும் போகத்தான் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/6&oldid=1705869" இலிருந்து மீள்விக்கப்பட்டது