பக்கம்:பராசக்தி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-6- பேசு: பேமிலிக்கு ஒருத்தரைதான் அலவ் பண்றது மொத்தமே முந்நூறு சீட்டுதான் ஒரு டிக்கட் தான் இருக்கு... சந் சரி புக் பண்ணுங்க ஞான: என்ன அண்ணா? சந்: நாளைக்கு சென்னைக்கு புறப்பட்ற கப்பல்ல மொத் தமே முன்னூறு டிக்கட்தானாம்! அதுவும் குடும்பத்துக்கு ஒருத்தர்தானாம். தங்கையின் வாழ்விலே பொன் விழா? அதை நாம் எல்லோரும் சேர்ந்து பார்க்க கொடுத்து வைக் கலே. ஈரஸ் : அப்படீன்னா யார் போறது? குண: (ஆவலுடன்) நான் போகிறேன் சந்: ஞானசேகரா தங்கைக்கு வேண்டிய புடவை நகை யெல்லாம் எடுத்து பெட்டிக்குள்ளே வச்சிட்டு குணசேகரனை வழி அனுப்பி விட்டு வா. (ஞான சேகரன் வருந்துகிறான்) ஞானசேகரா ஏம்பா கவலைப்படுற? நாமெல்லாம் போகலாம். ஞான : அண்ணா, அதுக்குள்ளே யுத்த நிலைமை ரொம். பவும் மோசமாகியிட்டா? சத்: எப்படியும் போய்ச் சேரலாம் சரஸ்: நான் கல்யாணிக்காக அரை டஜன் சேலையும் ஜாக்கெட்டும் தர்றேன் பெட்டியிலே இடம் இருக்குமா? ஞான: தங்கைக்கிண்ணா தலைமேலேகூட தூக்கிட்டுப் போவானே, சும்மா கொடுத்தனுப்புங்க அண்ணி (குணசேகரன் புறப்படுகிறான்) காட்சி-8 (மதுரையில் கல்யாண கோலத்துடன் கல்யாணி கண் ணாடி முன்னால் கண்ணீர் வீட்டுக்கொண்டே... கல்யாணி: அண்ணா என்னை மறந்து விட்டீர்களா? அம்மா என்று கூப்பிட கொடுத்துவைக்காத எனக்கு அண்ணா என்று கூப்பிட நீங்கள் இருக்கிறீர்கள் என்று நினைத்தேன். உலகில் ஒரு அண்ணன் இருந்து. பெண்ணாகப் பிறந்தால் பெரும் துளி என்பார்களே எனக்கு மூன்று அண்ணன்மார்கள் இருந்தும் என் கல்யாணத்தைக் காண ஒருவர் கூட வர வில்லையே... பார் : கல்யாணி! அழாதேம்மா! அசந்தர்ப்பம்- எல் லோருக்கும் ஏற்பட்டது தானே.. வருவாங்க.. கல்: அசந்தர்ப்பம் - இல்லை! என் அதிர்ஷ்டம் . மாணிக்கம் : கல்யாணி! வருத்தப்படாதே அண்ணன் மார் எப்படியும் வருவார்கள் நேரம் ஆகுது வா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/7&oldid=1705870" இலிருந்து மீள்விக்கப்பட்டது