பக்கம்:பராசக்தி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-7- கல் : அப்பா அண்ணன் வருவார்கள் என்று எவ்வளவு நாள் காத்திருந்தேன் என்மணக்கோலத்தை காண இன்னும் அண்ணன் ஒருவரும் வரவில்லையே? மாணிக்: வருவாங்கம்மா! இன்றைக்கு இல்லாவிட்டால் நாளைக்கு வருவார்கள் அழாதேம்மா கல் : அப்பா கல்யாணத்தை என்னப்பா? தள்ளி வைச்சிட்டா தகராறு மாணிக்: ஐயர் வச்ச நாளம்மா தவறினா வந்திடும் வா எல்லோரும் காத்துக்கிட்டு இருக்காங்க (திருமணம் இனிது நடந்தேறுகிறது) காட்சி-4 (கல்யாணி தன் கணவனோடு மாங்குயில் கூவும் சோலை யில் பைந்தமிழ் பண்பாடி மகிழ்தல்) தங் : இல்வாழ்வினிலே ஒளி ஏற்றும் தீபம் என் இதய ராணி ரூபம் கல் : இந்த தீபத்திலே சுடராய் திகழ்வதென் தீரனின் ரூபம் தங் : இள மாமயில் ரூபம் கல் : இல்வாழ்வினிலே ஒளி ஏற்றும் தீபம் நம் காதல் தீபம் தங் : கனியே! கன்னல் தமிழே அமுதே பனி தூங்கும் மலரே! நிலவே கல் : கனிவான மொழியால் எனையே கவர்ந்தீரே காந்தச் சிலையே தங் : உனைக் காணும்போது நெஞ்சில் ஊறிடும் உணர்ச்சி தனையே எழுதவோர் எழுத்தும் இல்லையே இரு: திருநாளிதுபோல் தினம் ஆடிப்பாடியே தேன்போல் வாழ்வோம் காட்சி-5 [இரங்கூனில்] (இல் ஞா : (பேப்பர் படித்தல்) உலகப் போரின் உச்ச நிலை ஜப்பான் யுத்த முஸ்திப்பு இரங்கூன் கடலோரங்களில் எதிரிகள் கப்பல்கள் இந்தியா போய்ச் சேரவில்லை-அண்ணா இந்தச் சேதியை அப்பாவும் தங்கையும் கேள்விப்பட்டால் ரொம்பவும் வருத்தப்படுவாங்க. கல்யாணக் காரியமெல்லாம் தடபுடலாக நடந்துகிட்டு இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/8&oldid=1705871" இலிருந்து மீள்விக்கப்பட்டது