பக்கம்:பராசக்தி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-8- சந்திர: ஆமாம் குணசேகரன் புறப்பட்டுப்போன கப்பல் இன்னும் மெட்ராசுக்கே போய்ச் சோலையாமே மணக்கோலத் தில் இருக்கும் தங்கையை பார்க்க முடியாத பாவியாகி விட்டோம். (இந்நேரம் ரேடியோவில் யுத்தச் செய்தி சொல்லப் படுகிறது. இன்று எதிரிகளின் குண்டு வீச்சினால் பலத்த சேதம்.சுமார் ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். பர்மாவில் ஒரு நகரமே காலியாகி விட்டது.] சரஸ்: நாம் இப்படி எத்தனை நாளைக்குத்தான் உயிர் வாழுறதாம். ஞான: உயிர் தப்புவதே பெரிய கஷ்டம்போல் இருக்கு. சந் : இனியும் நம்ம இங்கு இருக்கக் கூடாது நடந் தாவது இந்தியா போய்ச் சேருவோம். (இரங்கூனை விட்டு கால்நடையாக வெளியேறுகின்றனர்] காட்சி--6 [மதுரையில் கல்யாணியும் கணவன் தங்கப்பனும்) தங் : கல்யாணி! கல் : இதோ வந்துட்டேன். தங் : ஹூம்.. புறப்படு சீக்கிரம் கல் : ஏன் பறக்கிறீங்க (ஆடை அணிந்து வரும் போது தந்தையைப் பார்த்து) அப்பா போய்விட்டு வர்றோம். மாணிக்: சரியம்மா ஜாக்கிரதையா போயிட்டுவாங்க, (இந்நேரம் எதிர்வீட்டு பார்வதி வருகிறாள்] பார் : கல்யாணி கல் : வாங்க அக்கா பார் : நல்ல சமயத்திலேதான் வந்திருக்கேன். எங்கே பிரயாணம்? மாணி : ஒண்ணுமில்லை மாப்பிள்ளை படம் பிடிக்கப் போறாங்களாம். தங் : ஆமா! எழுதின கதை கல்யாணி ரொம்ப நாளா படம் பிடிக் கிறதை பார்க்கணும் பார்க்கணுமுன்னு பண்ணுது. பார் : போகவேண்டியது பொண்ணு தொந்தரவு தான். முழுகாதிருக்கிற இப்படி நேரம் காலம் இல்லாமல் வெளியே போனால் நல்லாவா இருக்கு. மாணி: தப்புதான் குழந்தை ஆசைபடுதில்லே போயிட் டுத்தான் வரட்டுமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/9&oldid=1705872" இலிருந்து மீள்விக்கப்பட்டது