பக்கம்:பரிசுச் சீட்டு திட்டம் கைவிடத் தயார்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

விநியோகிக்க வேண்டும் என்று ஏஜெண்டுகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அரசாங்கத்தின் நோக்கத்திற்கு மாறாகச் செயல்படுகிற ஏஜெண்டுகளின் ஏஜென்ஸிகள் ரத்துச்செய்யப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து சில ஏஜெண்டுகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

14 வரிசைகள்

மக்களிடம் ஆர்வப்பெருக்கு அதிகரித்திருக்கிற இந்த நேரத்தில் எத்தனை வரிசைகள் வெளியிட்டாலும் விற்பனையாகும் என்ற நிலை இருந்தும், அரசாங்கம் மூன்றாவது குலுக்கலுக்கு இது வரை 14 வரிசைப், பரிசுச் சீட்டுகளை வெளியிட்டிருக்கிறது.

முதலமைச்சர் அறைகூவல்

இந்த நிலையில், இரண்டாவது வரிசையில் முதல் பரிசு பெற்ற 11 லட்சாதிபதிகளுக்கும் பரிசளிப்பு விழா, சென்னை ராஜாஜி மண்டபத்தில் நடந்தது. விழாவில் கலந்து கொண்டு, பரிசு பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி உரையாற்றிய தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள், பரிசுச் சீட்டுகளைப் பற்றிக் கிளப்பப்படுகிற புகார்கள் அனைத்திற்கும் விரிவான விளக்கம் அளித்தார்கள். ஆர்வம் மிக்க மக்கள், தங்கள் ஆர்வம் அளவு கடந்து போகாமல் எப்படிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து அறிவுரை கூறினார்கள்.

ராஜாஜியே லாட்டரியை எதிர்க்கிறார் எனறு கூறுபவர்களுக்கு ஆணித்தரமான பதில் அளித்ததுடன், அறைகூவலும் விட்டார்.

பரிசுச் சீட்டுத் திட்டதைக் கண்டிக்கப் பாய்ந்து வருபவர்கள் மதுவிலக்கு பல மாநிலங்களில் காற்றில் பறப்பதைக்