பக்கம்:பரிசுச் சீட்டு திட்டம் கைவிடத் தயார்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

கண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் வினோதப் போக்கைச் சுட்டிக்காட்டினார்.

1968 டிசம்பர் 11-ந் தேதி ராஜாஜி மண்டபத்தில் ஆற்றிய உரை வருமாறு :-

தமிழக அரசு ஆரம்பிக்கும் எந்தத் திட்டமும் ஆரம்பத்தில் சந்தடி இருந்தாலும், போகப் போக அதனால் பல்வேறு வகையான மதிப்பீடுகளுக்கும், விமர்சனங்களுக்கும் இறையாவது இயற்கை.

பரிசுச் சீட்டுத் திட்டத்தை நாங்கள் ஆரம்பித்த நேரத்தில் தயக்கத்துடன்தான் ஆரம்பித்தோம். எந்த அளவிற்கு இந்தத் திட்டம் வெற்றிபெறும் என்பதை எதிர்பார்த்தோமோ அதைவிட, அதிக அளவிற்கு மக்கள் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கின்றனர். இப்படி அபரிமிதமான ஆதரவு கிடைத்ததைக் கண்டு, நிதி நிலைமையில் நாம் கஷ்டப்பட வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தவர்கள் கண்டனக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

சூதாட்ட மனப்பான்மையா?

லாட்டரிச் சீட்டுகளால் சூதாட்ட மனப்பான்மை வளர்ந்துவிட்டது என்ற குரல் கேட்கிறது. ரூ.50 வைத்திருந்து, அந்த 50-க்கும் லாட்டரிச் சீட்டுகளை வாங்கினால் அது சூதாட்ட மனப்பான்மை. ஒரு மாதத்திற்கு ஒரு பரிசுச் சீட்டு வாங்குவது எப்படி சூதாட்ட மனப்பான்மை யாகும்?

இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் குதிரைப் பந்தயங்கள் நடக்கின்றன. குதிரைப் பந்தயங்களில் பணம் கட்டுபவர்களுக்கு ஏற்படாத சூதாட்ட மனப்பான்மை, மாதத்திற்கு ஒரு லாட்டரிச் சீட்டு வாங்குவதன் மூலம் வளர்ந்துவிடுமர? ”போனால் வராது, பொழுது போனால்