பக்கம்:பரிசுச் சீட்டு திட்டம் கைவிடத் தயார்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

கிடைக்காது" என்று இப்போதே லாட்டரிச் சீட்டுகளை வாங்கிக்கொள்ளுங்கள் என்று யாரும் விற்கவில்லை. மாதத்திற்கொரு லாட்டரி நடத்துகிறோம். இன்று போனால் நாளை வராது என்ற நிலையில் நடத்தப்படவில்லை. எனவே, சூதாட்ட மனப்பான்மை என்பவர்கள் நல்லெண்ணத்தில் விமர்சனம் செய்பவர்களல்லர். ஒரு மாதத்திற்கு ஒரு பரிசுச் சீட்டு வாங்கினால் போதும். ஏராளமான பரிசுச் சீட்டுகளை வாங்கிவிட்டு பரிசு விழவில்லை என்பதால், ஏமாற்றத்துடன் யாரும் தூற்றித் திரியவேண்டாம். ஏக்கத்தின் விளைவாக, அரசாங்கத்திற்கு விரோதமாகப் பேச வேண்டாம். இந்த மாதம் ஒரு ரூபாய்க்கு வாங்கினோம். பரிசு விழாவிட்டாலும் பாதகமில்லை. அடுத்த முறை அல்லது அதற்கு அடுத்த முறை அதிர்ஷ்டத்தைச் சோதித்துக்கொள்ளலாம் என்று பொதுமக்கள் நிதானம் தவறாமல் நடந்துகொள்ள வேண்டும். யாரும் தங்கள் ஊதியம் முழுவதையும் பரிசுச் சீட்டில் முதலீடு செய்தால் அரசாங்கம் வரவேற்காது. அப்படிப்பட்டவர்களின் நடவடிக்கையை நானே கண்டிப்பேன்.

அபசுரம்

பரிசுச் சீட்டுத் திட்டத்தால் சிலர் ஓட்டாண்டிகளாகி விட்டதாகப் பிரச்சாரம் செய்பவர்களும் இருக்கிறார்கள். நல்ல சங்கீத வித்துவான் பாடும்போது ஒரு நாலு முறை இருமி, நாலு முறை தும்மி, சங்கீதம் களைகட்டாது அபசுரத்தில் முடியாதா! என்று எதிர்பார்க்கும் சிலரைப் போல், அரசாங்கத்தின் நல்ல நோக்கத்திற்குக் களங்கம் கற்பிக்கிற வகையில் இப்படிப் பேசுகிறார்கள்.

இவர்கள் யார்?

"இந்த மாகாணம் கள்ளுக்கடைகளைத் திறந்தது. அந்த மாகாணத்தில் இந்த மாதம் இத்தனை கள்ளுக் கடைகளைத் திறந்தார்கள். மக்கள் கியூ வரிசையில்