பக்கம்:பரிசுச் சீட்டு திட்டம் கைவிடத் தயார்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

நின்று மதுப்புட்டிகளை வாங்கிக் குடித்துவிட்டு மகிழ்ச்சி யோடிருக்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்பவர்கள்தான், எத்தனை கோடி வருவாய் வருவதாக இருந்தாலும், மது விலக்கைக் கைவிடமாட்டேன் என்று சொல்லுகிற தமிழக அரசிடம் வந்து, லாட்டரிச் சீட்டால் மக்கள் ஓட்டாண்டிகளாகிறார்கள் என்று இங்கே வந்து கூறுகிறார்கள். கள்ளுக்கடைகள் திறக்கப்படுவதை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேச முடியாதவர்கள் இங்கு வந்து மக்கள் ஓட்டாண்டிகளாகிவிட்டார்கள் என்று காரசாரமாகப் பேசுகிறார்கள். மக்கள் எல்லாம் பங்குகொள்கிற வகையில் நடத்தப்படுகிற இந்தப் பரிசுச் சீட்டுத் திட்டத்தால் ஓட்டாண்டிகளாகிற சூழ்நிலையில் அரசாங்கத்தின் பரிசுத்திட்டம் நடத்தப்படவில்லை. பொது நன்மை கருதித்தான் பரிசுச் சீட்டுகள் நடத்தப்படுகின்றன. அதை மனதில் கொண்டுதான் பொதுமக்களும் அரசாங்கத்தின் திட்டத்தை ஆதரித்து வருகிறார்கள்.

ராஜாஜி அறைகூவல்

ராஜாஜியே எதிர்க்கிறார்! எனவே, பரிசுச் சீட்டுத் திட்டத்தைக் கைவிடுங்கள் என்று எனக்குப் பலர் சிபாரிசு செய்கிறார்கள். ராஜாஜியிடம் நான் மிகுந்த மதிப்பு வைத் திருக்கிறேன். ராஜாஜியின் கருத்திற்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளுக்கும் இடம் இல்லை. ராஜாஜி சொல்லுகிற நல்லுரைகள் தமிழ் நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியா முழுவதற்கும் சேர்ந்துதான் அவர் ஆன்மீக நெறிகளைப் போதித்துக் கொண்டிருக்கிறார். ராஜாஜியின் புத்திமதியைக் கேட்டு, மற்ற மாநிலங்களெல்லாம் பரிசுச் சீட்டுத் திட்டத்தைக் கைவிட முன்வருகிற நேரத்தில் நானும் உடனடியாக பரிசுச் சீட்டுத் திட்டத்தைக் கைவிடத் தயார். என்னுடைய நண்பர்கள் சிலர் கள்ளுக்கடைகளைத் திறந்தால இத்தனை கோடி வருமானம் வரும் என்று கணக்குக்