பக்கம்:பரிசுச் சீட்டு திட்டம் கைவிடத் தயார்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

காட்டினாலும், நான் மதுவிலக்கில் பிடிவாதமாக இருக்கிறேன். பரிசுத் திட்டத்தை, இந்தியாவில் பல மாநில அரசுகள் நடத்திக் கொண்டிருக்கின்றன. ராஜாஜியின் யோசனைக்குச் செவிசாய்த்து, மாநில அரசுகள் தங்களது பரிசுத் திட்டங்களைக் கைவிட முன்வருமானால், நாங்கள் உடனடியாக பரிசுச் சீட்டுத் திட்டத்தைக் கைவிடச் சித்தமாக இருக்கிறோம். ராஜாஜியே சொல்லிவிட்டாரே, நீங்கள் ஏன் கேட்கவில்லை? என்று சொல்வதானால் - விவாதத்திற்காக அப்படிப்பட்ட பேச்சைச் சொல்லார்களானால், ராஜாஜியின் உயர்ந்த தத்துவங்களைச் செயல்படுத்துகின்ற அளவிற்கு நாறு இன்னமும் பக்குவப்படவில்லை என்பதைத் தான் விவாதத்திற்குப் பதிலாகச் சொல்ல முடியும்.

சினிமா பாதிக்கப்பட்டதா

தமிழக அரசு பரிசுச் சீட்டுகளை நடத்துவதன் மூலம், சினிமாத் தொழில் பாதிக்கப்பட்டிருப்பதாக சினிமாத்தொழில் சம்மந்தப்பட்ட என்னுடைய நண்பர்கள் சிலபேர் சொல்கிறார்கள். நானும், வாரத்திற்கு வாரம், மாதத்திற்கு மாதம் சினிமாக் கொட்டகைகளில் எவ்வளவு வசூலாகிறது என்ற கணக்கைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். சினிமாவிற்கு வசூல் குறைந்து விட்டது என்று சொல்கிற அதே நேரத்தில், இந்தப் படம் 10-வது வாரம் 11-வது வாரம் என்று படம் ஓடும் கணக்கையும் விளம்பரமாக வெளியிட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். பரிசுசீட்டால் சினிமா வசூல் குறைந்தால், அதனால் அரசாங்கத் திற்கும் தான் நஷ்டம் ஏற்படும். தமாஷா வரி, அரசிற்குக் கிடைக்கும் முக்கிய வரி இனங்களில் ஒன்று. எனவே, உண்மையிலேயே சினிமாத் தொழில் பாதிக்கப்படுகிற நிலை வந்தால் சினிமாத் தொழிலுக்குத் தக்க ஆறுதல் அளிக்க நான் யோசிப்பேன்.