பக்கம்:பரிசுச் சீட்டு திட்டம் கைவிடத் தயார்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

ஒன்றால் ஒன்று கெடுமா?

முதல் இரண்டு வரிசைப் பரிசுச்சீட்டுகள் குலுக்கலின் மூலம் செலவு போக ரூ. 1-25 கோடி நிகர வருவாய் கிடைத்ததைப் பார்த்தவுடன், "இந்தப் பரிசுச்சீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்படாமல் இருந்திருந்தால், இந்த 1-25 கோடி ரூபாயும் நமக்குத்தானே வருமானமாக வந்திருக்கும்" என்று எண்ணி சினிமாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள், பரிசுச் சீட்டால் தங்களுக்குப் பாதகம் வருவதாகக் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

அறுவடைக் காலத்தில் வசூல் சற்று குறைவாக இருக்கும், அதற்கப்புறம் வசூல் பழையநிலைக்கே வந்துவிடும். சினிமாவுக்குப் போகும் பணத்தில் பரிசுச்சீட்டு வாங்கினால் என்ன? என்று ஆரம்பத்தில் கருதுபவர்கள்கூட, ஒருமாதம் இரண்டுமாதம் சென்றதும், லாட்டரிக்கு ஒரு ரூபாய் என்று தனியாகத் தங்கள் குடும்ப வரவு செலவுத் திட்டத்தில் ஓதுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

லாட்டரிச் சீட்டுகள் நடத்தப்படுவதால உலகில் வேறு எந்த நாட்டிலாவது, சினிமாவோ, நாடகமோ பாதிக்கப் பட்டதா? என்றால் இல்லை.

மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் - சினிமாக் கொடடகைகளுக்கு வெளியில் சினிராக்களுக்கு முன்னிலையில் லாட்டரிச்சீட்டுக் கடைகள் உள்ளன. சினிமாக் கொட்டகைகளுக்கு அருகாமையில் லாட்டரி விற்பனை நடத்தப்படுவதால் சினிமாக் கொட்டகைகளின் வசூல் பாதிக்கப்படவில்லை.

நியூயார்க் நகரில் வாரத்திற்கொரு லாட்டரி நடத்துகிறார்கள்.