பக்கம்:பரிசுச் சீட்டு திட்டம் கைவிடத் தயார்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

அப்படி இருந்தும், 6 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடக்கிற நாடகத்தைக்கூட மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்துக் கொண்டிருக்கின்றனர். அங்கும் மக்கள், சினிமாவையோ, நாடகத்தையோ விட்டு விட்டு, லாட்டரிச் சீட்டுகளை வாங்கவில்லை.

ஆரம்பத்தில் சினிமாக் கொட்டகைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, ஹோட்டல்கள் எல்லாம் படுத்துவிடும். சினிமா வந்துவிட்டதால் ஹோட்டல்களை யெல்லாம் மூடிவிட வேண்டியிருக்கும் எனக் கூடச் சொன்னார்கள். இன்றைய நிலமை என்ன? சினிமாக் கொட்டகைகளுக்குள்ளேயே ஹோட்டல்களை ஆரம்பித்து, சினிமாவிற்கு எவ்வளவு வசூலாகிறதோ அந்த அளவிற்கு ஹோட்டல்களிலும் வசூலாகிறது.

பஸ்கள் வந்துவிட்டால் குதிரை வண்டிகள், மாட்டு வண்டிகளுக்கு வேலையே இருக்காது என்று கூடச் சொன்னார்கள். பஸ் போக்குவரத்து அதிகரித்துள்ள இந்தக் காலத்தில் குதிரை, மாட்டுவண்டிகளும் மக்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. பஸ்ஸிலிருந்து இறங்கியதும் சந்து, பொந்துகளுக்குச் செல்ல; பஸ்கள் செல்ல முடியாத தெருக்களில் செல்ல மாட்டு வண்டிகள் குதிரை வண்டிகளைத் தான் பொதுமக்கள் அமர்த்திக் கொள்கிறார்கள். ஆக ஒன்றை யொன்று விரட்டி விடும் என்ற பேச்சிற்கே இடம் இல்லை. உண்மையிலேயே சினிமாத் தொழில் பாதிக்கப்படுகிற சூழ்நிலை உருவானால், அதற்கு நிவாரணம் அளிப்பது குறித்து நான் யோசிப்பேன்.

பரிசு பெற்றவர்கள் தங்கள் பணத்தை, அதிர்ஷ்டத்தை, அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என்று தாறுமாறாகச் செலவிட்டு விடாமல், வீண் ஆடம்பரங்கள் கல்யாண டாம்பீகங்கள், தேர்த்திருவிழாக்கள என்று பணத்தை விரயமாக்கால், சிக்கனமாகச் செலவிட்டு, சிறு தொழில்