பக்கம்:பரிசுச் சீட்டு திட்டம் கைவிடத் தயார்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

அறிஞர் அண்ணா அவர்கள் தமது பட்ஜெட் உரையில் சொன்னதை யொட்டி, 1968-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ம் தேதி பரிசுச் சீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

தமிழக கவர்னர் சர்தார் உஜ்ஜல் சிங் தலைமையில் ராஜாஜி மண்டபத்தில் நடந்த அந்த விழாவில், முதலாவது வரிசைப் பரிசுச் சீட்டுகள் விற்பனைக்கு விடப்பட்டன. ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் பரபரப்போ, கண்டனமோ, இல்லாமல், கிணற்றில் கல் போட்டது போல் பரிசுச் சீட்டுத் திட்டம் தொடங்கியது.

முதல் குலுக்கல் முடிந்த பின்னர், தமிழக அரசின் லாட்டரிச் சீட்டுகளுக்கு கிராக்கி அதிகரித்தது. கண்டனமும் கூடவே கிளம்பிற்று. இதையெல்லாம் முன் கூட்டியே அனுமானித்து, அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்:-

இன்றைய தினம் ஆரம்பிக்கப்படுகிற இந்தப் பரிசுச் சீட்டுத் திட்டம் - நல்ல காரியங்களுக்கு உதவுகிற ஒரு நற்பணிக்கு மக்கள் ஊக்கமளிக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்கான அறிகுறி: அரசாங்கம் மேற்கொள்கிற திட்டங்களில், அரசாங்கம் நடத்துகிற எல்லாப் பணிகளிலும் எல்லாத் தரப்பு மக்களும் பங்குகொள்கிறார்கள் என்பதைக் காட்டும் வகையில்தான் ஒரு பரிசுச் சீட்டு ஒரு ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு ரூபாய் ஒரு டிக்கட் வீதம் விற்கலாம் என்றுகூட யோசனைகள் தெரிவிக்கப்பட்டது. சாதாரண மக்களும், அன்றாடம் சம்பாதித்துப் பிழைப்பவர்களும், அரசாங்கத்தின் பரிசுச் சீட்டை வாங்க வேண்டும் என்ற நோக்கோடுதான், ஒரு ரூபாய்க்கு ஒரு சீட்டு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டுவகையிலும்

ஒரு ரூபாய்க்கு ஒரு பரிசுச்சீட்டு வாங்குவதன் மூலம், உங்களது அதிர்ஷ்டத்தையும் சோதிக்கலாம். பரிசு