பக்கம்:பரிசுச் சீட்டு திட்டம் கைவிடத் தயார்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

கிடைக்காவிட்டால், அரசாங்கத்தின் நற்பணிகளுக்கு நமது ஒரு ரூபாய் உதவிற்று என்ற நிம்மதியோடிருக்கலாம்.

தனிப்பட்டவர்கள் பரிசுச்சீட்டுகளை நடத்தும்போது, அந்தப் பரிசுத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதையும், தனிப்பட்ட ஒரு சிலரே தங்களது சொந்த நலிமைக்காகப் பயன்படுத்திக் கொண்டனர்.

அரசாங்கமே இப்போது பரிசுத்திட்டத்தை அமுல் படுத்துவதன் மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதும் பள்ளிகளாக, கல்லூரிகளாக, நூல் நிலையங்களாக, தீர்ப்பாசனத் திட்டங்களாக உருமாறும்.

நான் கொடுத்த ஒரு ரூபாய் இதோ ஒரு கல்லூரியாக வளர்ந்திருக்கிறது. நான் கொடுத்த பணம் அதோ ஒரு மருத்துவமனையாக மாறி இருக்கிறது; பள்ளிக்கூடம் கட்ட பயன்பட்டிருக்கிறது என்று நீங்கள் நெஞ்சுநிமிர்த்திப் பெருமையுடன் கூறிக்கொள்ள முடியும்.

அரசாங்கம் மக்களுக்குச் செய்து தீரவேண்டிய அத்தியாவசியப் பணிகள் அனைத்தும், அரசாங்கத்தின் வரி வருவாய் வகைகளிலிருந்து மட்டும் நிறைவேற்றப்பட முடியாது. வரி விதிப்புகளுக்கும் ஒரு எல்லையுண்டு. மக்கள் தாங்குகிற அளவிற்குத்தான் வரிகளைப்போட்டு வசூலிக்க முடியும். வரிகளின் அளவிற்கு ஏற்பத்தான் வசதிகள் பெருகவேண்டும் என்று இருந்துவிட்டால், பல பொது நன்மைகள் முற்றுப் பெறாமலே போய்விடும். இப்போது தமிழ் நாட்டில் வரி வருவாய்கள் அனைத்தும், உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டன. இனியும் வரிகளைக் கூடுதலாக்கி, மக்களைத் துன்புறுத்த வேண்டும் என்பது அரசாங்கத்தின் தோக்கம் அல்ல. எனவேதான் மக்கள் தாங்களே விரும்பிக் கொடுக்கிற பணத்திலிருந்து பொது நன்மைகளை மேற்கொள்ளலாம் என்ற நோக்கத்தோடு பரிசுச்சீட்டுத் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம்.