பக்கம்:பரிசுச் சீட்டு திட்டம் கைவிடத் தயார்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

கோளாறுகள் இல்லை

இதற்கு முன்னர் அரசாங்கமே நடத்திய, பல பரிசுத் திட்டங்களில், விற்காத டிக்கட் எண்களையும் சேர்த்துக் குலுக்கி, அரசாங்கத்திற்கே பரிசுகள் விழுந்த நிகழ்ச்சிகள் நடந்திருப்பதை உத்தேசித்து முன்னெச்சரிக்கையுடன், விற்பனையாகாத டிக்கட்டுகளை -- பரிசுக் குலுக்கலில் சேர்க்காமல் இருக்க, ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். அரசாங்கத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்குப் பரிசுகள் விழுந்தால், இதில் ஏதோ கோளாறு உள்ளது என மக்கள் சந்தேகிக்கிற சூழ்நிலை உருவாகக் கூடும் என்பதால் தான் அமைச்சர்கள் பரிசுச் சீட்டுகளை வாங்கக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதிர்ஷ்டம் இருக்கும் ஏதாவதொரு அமைச்சருக்கு பரிசு விழுந்தாலும் பரிசுச் சீட்டிலேயே கோளாறு உள்ளது என்று மற்றவர்கள் சந்தேகிக்கக் கூடும் என்பதால்தான் அமைச்சர்கள் பரிசுச் சீட்டுகள் வாங்கள் கூடாது என்று முடிவு செய்துள்ளோம்.

கவர்னருக்கு விழுந்தாலும்

முதல் பரிசுட்சீட்டைத் தமிழக கவர்னர் சர்தார் உஜ்ஜல் சிங்கிற்கு விற்கிறோம். அவர் வாங்குகிற சீட்டிற்கு முதல் பரிசு விழுந்தால், அல்லது வேறு எந்த வகையான பரிசுகள் விழுந்தாலும், அதைச் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு நன்கொடையாகக் கொடுத்துவிட வேண்டும் என நான் சொன்னேன். அதைக் கவர்னர் அவர்கள் ஏற்றுக்கொண்டு, பரிசு விழுந்தால் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு நன்கொடை கொடுத்துவிட சம்மதம் தெரிவித்துள்ளார்.

எதைக்காட்டும்

இந்தப் பரிசுச்சீட்டுத் திட்டத்தால் எத்தனைபேர் புதிதாக லட்சாதிபதிகளானார்கள் என்பதுமட்டுமல்ல, பொது மக்கள் எந்த அளவிற்கு ஆர்வமும், உற்சாகமும் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில்