பக்கம்:பரிசுச் சீட்டு திட்டம் கைவிடத் தயார்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

பரிசுச்சீட்டுகளின் வெற்றி அமையும். பரிசு கிடைக்கவில்லை என்பதால் யாரும் ஏமாற்றம் அடையத் தேவை இல்லை. அரசாங்கப் பணிகளுக்கு நாமும் ஒரு ரூபாய் கொடுத்தோம் என்ற நிம்மதி கொள்ள வேண்டும். பரிசு பெறுபவர்களும் பரிசுகிடைத்தது என்பதால், அதை வீண் விரயங்களில் செலவிட்டு விடாமல், நல்ல காரியங்களில் நாட்டை மேம்படுத்தும் பணிகளில், சிறு தொழில்களில் முதலீடு செய்ய வேண்டும். அரசாங்கத்தின் நோக்கம் சிறிதும் பழுதுபடாத வகையில் பரிசுச்சீட்டுகளை வாங்கும் பொதுமக்களும், பரிசுகளைப் பெறுவோரும் செயல்பட வேண்டும்.


மலேசியா, சிங்கப்பூர்போன்ற பல்வேறு வெளிநாடுகளிலும் பரிசுச் சீட்டுகளை நடத்தும் விதத்தை விரிவான முறையிலும், தெளிவாகவும் ஆராய்ந்தறிந்த பின்னர்தான், குலுக்கும் முறை, போன்ற பரிசுத் திட்ட அம்சங்கள் பலவற்றை நாங்கள் இங்கு புதிதாக அமுல்படுத்தி வருகிறோம். பரிசுச் சீட்டுகளைக் குலுக்கி, பரிசு விழுந்தவர்களைத் தேர்ந்தெடுப்பதில், நீதிபதிகளைக் கொண்ட கமிட்டியொன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

அனுதாபம் வேண்டாம்

அண்ணாதுரையின் அரசு செய்கிறது. ஏதோ ஒரு ரூபாய்க்கு டிக்கட் வாங்கி ஆதரிப்போம் என்று அனுதாபத்தில் யாரும் டிக்கட் வாங்க வேண்டாம். அரசாங்கம் என்பது நிரந்தரமானது. அரசாங்கம் தனது அன்றாடப் பணிகள் தவிர, நிரந்தமான கல்வி போன்ற, நல்ல திட்டங்களுக்கும் முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது.

இரண்டாவது குலுக்கல்

முதல் குலுக்கல் நடந்து முடிந்து, 8 பேருக்கு முதல் பரிசு அளிக்கப்பட்டது. இந்தப் பரிசளிப்பை யொட்டி