பக்கம்:பரிசுச் சீட்டு திட்டம் கைவிடத் தயார்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

தமிழக அரசின் பரிசுச் சீடடுகளுக்குப் பெரும் வரவேற்பும், பல இடங்களில் உற்சாகமான விற்பனையும் நடந்தது. இரண்டாவதாக 11 வரிசைகள் வெளியிடப்பட்டன. இரண்டாவது வரிசைக் குலுக்கல் நடந்து முடிந்தவுடன் அரசின் லாட்டரித் திட்டத்திற்கு, காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ”சூதாட்டம்” என்றும், ”மக்களை ஓடடாண்டியாக்குகிற திட்டம்” என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்ப ஆரம்பித்தனர். இவர்களது அன்றாடப் பிரச்சாரங்களை - கண்டன முழக்கங்களை --எழுத்துக்களை -- மக்கள் பொருட்படுத்துவதாகக் காணோம். சந்தடியின்றி விற்றுக் கொண்டிருந்த லாட்டரிச் சீட்டு விற்பனைக் கடைகளில் - ஆண்களும் பெண்களும், வரிசை வரிசையாக, அணிவகுத்து நிற்க ஆரம்பித்தனர். இவ்வளவு ஆர்வம் கரைபுரண்டோடுவதைக் கண்ட காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் மறியல் செய்வோம் என்றுகூட எச்சரிக்கைவிட ஆரம்பித்தனர். இவ்வளவிற்குப் பின்னரும் மக்களது ஆர்வம் அடங்கிற்றா என்றால்? இல்லை.


அரசாங்கத்திற்கும் சீட்டுகளை வெளியிடுவதில் சிறிது சங்கடம் ஏற்பட்டு, புதிய எந்திரங்கள் மூைைறத் தருவித்து அரசாங்க அச்சகத்தில அமைக்கும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது.

பரிசுச் சீட்டுகள் விற்பனையில், விரியோகத்தில் சில கோளாறுகள் ஏற்படலாம் என்பதை உணர்ந்த அரசாங்கம், லாட்டரிச் சீட்டுகளை எப்படி விற்பனை செய்ய வேண்டும்? என்ற விதிமுறைகளை விரிவாக ஏஜெண்டுகளுக்கு அறிவிப்பு மூலம் விளக்கியது.

ஒரு வரிசையில் ஒரு நபருக்கு, ரு டிக்கட் வீதம் தான் ஏஜெண்டுகள் கொடுக்க வேண்டும் - தாங்கள் இருக்கும் இடங்களிலேயே கேட்டு வருகிற மக்களுக்கு,