பக்கம்:பரிசு, அண்ணாதுரை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" 10 மலர்க்கொடியின் அங்கங்கள் ஒன்றை ஒன்று சண் டைக்கு இழுத்தபடி இருந்தன. கண் சொல்லிற்று "நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் பார். கடல் அலைபோல் நான் பாய்வதை நோக்கு. அந்த மோகன மிரட்சியைக் காணு என்று. புருவங்கள் "சும்மா கிட கண்ணே! நான் மதனன் வில்போல் வளைந்து கொடுக்கும் காட்சி யன்றோ உன் அழகை எடுத்துக் காட்டுகிறது. நானில்லா விட்டால் நீ எங்கே. தங்கப் பெட்டிக்கு தகதகப்பு. வை ரத்திலே உள்ள ஒளி-இவைபோல கண்ணின் வனப்புக்கு நானன்றோ காரணம்." என்று சொல்லிற்று நெற்றி சும்மா இருந்ததா? நான் பரந்து பளபளத்து பேழை என இல்லா விடில். இந்தப் புருவமோ, கண்களோ எங்கு தங்கும் என்று வினவிற்று. 'என்னைக் கண்டு காதகரும் காமுறும் அளவு உள்ளேன். நானின்றி நல்ல கண்ணோ, புருவமோ, நெற்றி யோ, ஏது" என்று கன்னங்கள் கொஞ்சின. "மன்ன னுக்கு முடிபோல. மாலைக்கு மணம்போல நான் இருக்கும் வனப்பு என்ன பாருங்கள் '" என்று கூந்தல் கூவிற்று. இப் படியே ஒவ்வொரு அங்கமும் ஒன்றை ஒன்று வம்புக்கிழுக் கும் அளவு வனப்புள்ள மங்கை, மலர்க் கொடி. எனவே அவளால். மனதுக்கும் வாலிபருக்கும் நேரிட்ட போராட்டங்களோ இவ்வளவு அவ்வளவு அல்ல. எத்தனையோ அதிகாரிகள் தமது பீடத்திலமர்ந்து இந்தப் பெண்ணை எண்ணியபடி, தமது கடமையை மறந்ததுண்டு. எத்தனையோ இளைஞர்கள், இவளன்றோ வாழ்க்கை யின் வழிகாட்டி. இன்பத்தின் இல்லம், இவளன்றி நாம் ஏன் இருப்பது உலகில் என்று எண்ணி ஏங்கியதுண்டு.