பக்கம்:பரிசு, அண்ணாதுரை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 "பேசலாம், அதை யாரம்மா இல்லை என்று சொன் னது? காரியத்திலே காட்ட வேண்டுமே, அது தானே தேவை, உங்கள் பள்ளி வாத்தியாருக்கு கிரகணம் எப்படி உண்டாகிறது என்பது நன்றாகத் தெரியும். அதை உங்க ளுக்கு சொல்லியுங் கொடுக்கிறார். ஆனால் கிரகணத்தன்று அவர் எங்கே இருக்கிறார்" என்று மங்கம்மாள் கூறினாள். மலர்க் கொடி "ஆமாம்! அர்த்த நாரிசுவர ஐயர் அவசியம் குளத்தங்கரைக்குத்தான் செல்வார். மறக்கமாட்டார்" என்றாள். " 'அதைத்தான் சொல்லுகிறேன் நானும்" என்றாள் மங்கம்மாள். பாழாய்ப்போன சூரியன் ஏன் இப்படிப் பாடுபடுத்து கிறானோ தெரிய வில்லையே. நெருப்பிலே போட்டு வாட்டு வதைப்போல வாட்டி விடுகிறான். கால் கொப்பளித்து விடும்போல இருக்கிறது என்று காலை முதல் மாலை வரை கூறுபவரிடம், அதே சூரியன் மாலையிலே மறைகிற நேரத் திலே ஒரு அரைமணி நேரம், அளவுகடந்த புகழ்ச்சியைப் பெற்று விடுகிறது. வானத்திலே சூரியன் மறையும் போது கிளம்பும் அந்த செந்நிறம் எவ்வளவு சொகுசு! கண்களுக்கு அது தரும் குளிர்ச்சி எவ்வளவு! காவியக்கார ரையும் ஓவியக்காரரையும் அந்த காட்சி தூண்டி விடுகிறது. காதலருங்கூட அவ்வேளையில் மிக 'குஷாலாக" இருப்ப துண்டு. ஏண்டி மாரீ, எடுத்துக்கோ கூடையை அரிவாளைப் போட்டாயா, ஆகட்டும். புறப்படு வீட்டுக்கு" என்று கெஞ்சின படி குப்பன் மாரியுடன், களத்தை விட்டு புறப்படும் நேரம்.