பக்கம்:பரிசு, அண்ணாதுரை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ஷருக்கும்போதே மங்கம்மாளுக்கு பாட்டிலும் நடிப்பிலும் அதிக பிரியம். பள்ளிக்கூடத்தில் நடக்கும் எந்த விழா வுக்கும் மங்கம்மா தான் பாடவேண்டும். மங்கம்மாவும் தங்கு தடையின்றி பாடுவாள். வந்த பிரமுகரும் தட்டிக் கொடுத்துவிட்டு, சாரீரம் ரொம்ப ஜோர்-பாடும் போதே காது குளிருகிறது-என்று சொல்லாமற் போவதில்லை. விதவையாகும் வரையிலே, மங்கம்மாள் பாடுவது கிடை யாது. பாட்டு பாடினால் பதி தன்னைப்பற்றி என்ன எண் ணுகிறாரோ என்று பயம். விதவையான பிறகு பிழைப்புக்கு வழியாக பாட்டுத்தான் உதவிற்று. அண்டை அயலார் வீட்டு குழந்தைகளுக்கு நலங்கு பாட்டு கற்றுக்கொடுப்பது. சின்ன சின்ன சிங்காரப்பாட்டு தங்கமே தங்கம், கும்மி, முதலிய பாட்டுகள் கற்றுக்கொடுத்து வந்தாள். ஒரு தினம் ஒரு வீட்டுக் குழந்தைக்கு, பிரார் திருவொற்றியூர் தேர் வருகுது திரும்பிப் பாரடி கண்ணே திரும்பிப் பாரடி, டியில் இருக்கும் உன் மடிய மக்காச் சோளத்தை தின்னு பாரடி என்று பாட்டு கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் அந்த வீட்டுக்கு வந்திருந்த ஒருவர், பாட்டைக்கேட்டு சொக்கிவிட்டார். பலே பேஷ் என்று கொண்டாடினார். பிறகு மெதுவாக மங்கம்மாளிடம் பேச ஆரம்பித்து, கடை சியில் தமது நாடகக் கம்பெனியில் நடிகையாகச் சேர்த்துக் கொண்டார். மங்கம்மாளின் புகழ் மலேயா, சிங்கப்பூர்