பக்கம்:பரிசு, அண்ணாதுரை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 பூராவும் பரவிற்று, பாட்டிலும் நடிப்பிலும் இணையில்லை என்று பெயர் எடுத்தாள் மதனசுந்தரி-அது மங்கம்மாளின் நாடகப் பெயர். பணமும் சேர்த்துக்கொண்டாள். பணத் துடன் பிறந்தது தான் மலர்க்கொடி. இத்தனை சேதியும் சங்கரனுக்கு முதலில் தெரியாது. சிங்கள நாட்டிலிருந்து விட்டு, சென்னை திரும்பிய ஒரு பிரபல குடும்பம் என்பது தான் அவன் முதலில் கேள்விப்பட்டது. சங்கரன், பெற் றோரை இழந்த ஒரு கொங்கு வேளாளன். பெருங்குடி. செல்வம் கொஞ்சம். இருந்தா லும் தனது ஜாதி உயர்விலே மட்டற்ற நம்பிக்கை உண்டு. அந்த உணர்ச்சி உள்ளத் திலே எங்கேயோ தூங்கிக்கொண்டிருந்தது. அன்று விருந் திலே, மங்கம்மாள் ஒரு நாடகக்காரி என்பது தெரிந்த உடனே, உணர்ச்சி பொங்கி மேலிட்டு வெளி வந்தது. கம் 1118 4 சேற்றிலே செந்தாமரை போல, இந்த மலர்க்கொடி, கடைசியில் ஒரு நாடகக்காரியின் மகளாகவா இருக்க வேண்டும்? என்னென்பேன் என் அதிர்ஷ்டத்தை ? அந்தப் பேரழகியை நான் மணந்தால் ஊரார் என்னை நேரில் ஏதும் கூறாவிட்டாலும், மறைவாக வேனும் நாடகக்காரியைக் கலியாணம் செய்துகொண்டவன் என்று தானே தூற்று வார்கள், நான் எங்ஙனம் அதைக் கேட்டு சகிப்பேன்- என்று எண்ணி சங்கரன் விசாரப்பட்டான். மலர்க்கொடி யின் அழகு, அவள் மீது அவன் கொண்ட காதல், "ஜாதி யாவது பாழாவது சங்கரா, அவளை நீ நேசிக்கிறாய்,அவள் உன்னை நேசிக்கிறாள்-நல்ல ஜோடி! அவ்வளவு