பக்கம்:பரிசு, அண்ணாதுரை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடியும் என்று திட்டம்போட்டு சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் வியாசர் விருந்தை மக்கள் மத்தியிலே மலிவுப்பதிப்பு என்ற கண்கட்டி வித்தை யை கட்டவிழ்த்து விட்டுப் பார்த்தார்- கோயங்கா மூலமாக. சக்கரவர்த்தித் திருமகன் வந்தான் மக்களை மாடுகளாக மாற்ற! அவ்வளவு தான்! புராணங்கள் கிளம்பின புற்றீசல் போல ! தித்திப்பான பதார்த்தத்தை நோக்கி யும் எறும்புகள் சாரை சாரையாகச் செல்லுகின்றன. அதே எறும்புகள் இறந்து போன பூச்சிகள் போன்ற துர்நாற்றமானவைகளைத் தேடியும் சாரை சாரையாகச் செல்லத்தான் செய்கின்றன. இதுவரை மக்கள் கூட்டம் துர்நாற்றமான வைகளைத் தேடிச்சென்று அதை விரும்பி ஏற்றுக்கொண்டவர்களும் சிலர் உண்டு. கண்டவுடன் சீ இது எதற்கென்று உதறி எறிந்துவிட்டு வந்தவர்களும் பலர் உண்டு. சிலரைப்பற்றி நமக்கு அக்கறையில்லை. அவர்கள் இன்றில்லாவிடினும் என்றாவது ஒரு நாள் பலரைப் பார்த்து திருந்திவிடு வார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நாட்டிலுள்ள அந்தப்பலர் வெகுநாட் எதிர்பார்த்திருந்தார்கள்-எதிர் களாக பார்த்திருந்தது மட்டுமல்ல - எல்லோரும்