பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7



"எண்ணிடி னுடன்பி றப்பென் றெவருமே யின்றி நீயிம் மண்ணினிற் பிறந்து, 'மானி மாதெ' ன மலர்ந்தாய்! மற்றென் கண்ணைக்கேட் டிருந்தால் கூடக் களைந்தீவேன்; கவிதை பாடப் பெண்ணுக்குக் கற்பிக் கின்ற பேறு நான் பெற்றோ னன்றே !

கொல்லையில் குழிசெய்தூன்றிக்
கொழுந்தோடிப் படர வுள்ள முல்லையும் பழந்த ராது ! முந்திரி மலர்த ராது ! சொல்லையுன் முத்துப் பல்போல் சோடித்துக் கவிதை செய்யும் தொல்லையில்மாட்டிக்கொண்டேன்
துயருக்கா ளாகின் றாய் நீ ?

ஊணையே வொருநாள் நீக்கி
உபவாசத் துடனு முற்றவ் வாணியை வரவ ழைத்துன்
வாய் தனைத் திறந்து காட்டின், ஆணியால் வாணி, நாவில் அட்சரம் பதித்தா லன்றே
கோணியில், கவிதை யாத்துக் கொட்டலா மெனுங்கூற் றுண்டு!

அரவிந்த மாய் நீ , யாசை யளியாமோ ரானுக் காட்பட் டிரவுந்தான், பகலுந் தான் மற் றிருவரு மிரண்டற் றொன்றிப் பரவும் நன் மழலை மக்கள் படைப்பின்பம் பாழ்பண் ணாதே! கரவுந்தான், கவிதை யுந்தான் கற்பிக்கும் கலையன்"றென்றேன்.