பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8



3. பறவைகளின் பரிவு

காலையைக் காட்டப் பூத்துக் கவினொளி செய்து கண்ணாய் மாலையைக் காட்ட மாய்ந்து மறைகின்ற மாயோற் கன்றிச் சாலையைச் கூட்டிச் சார்ந்து
'சாயா'விற் போன்சாற் றும்,நூல்
வேலையைக் காட்ட வேளை விரும்புமா றிலைவே றிங்கே!

கல்லினும் வலிய நெஞ்சில் கபடம்பொய்க் கனிவு காட்டும் புல்லின் சொல் கேட்ட ஆலின் புலனெல்லாம் பொன்றிப் போகக் கொல்லனின் துருத்தி யொப்பக் குடிகொண்ட பெருமூச் சோடும் சொல்லென ஆடா மல்மெய் சோர்ந்துபோ யிருந்த தன்றே!

காக்கையப் புல்சொல் லோர்ந்து கருத்தூன்றிக் கரைந்து காத்தே யாக்கையின் நிறத்தி லொத்த அறிவுசால் குரங்கின் பால்போய் 'நோக்குக நண்பா! வுற்றிந் நுண்ணிய அறுகின் நூக்கும் நாக்கினின் றெழுகும் நஞ்சால் நலிகின்ற தாலின் றெ' என்னும்!

'மரங்களி லெல்லாம் நல்ல
மர'மென ஆலின் கண்வாழ் குரங்கொடு கொக்கு, மைனாக் குருவிக ளுணர்ந்து கூட இரங்கிய நெஞ்சி னோடும் இதயமு மெரிந்து புல்லின் தரந்தனை மிகவும் தாழ்த்தித் தான்வையத் தொடங்கிற் றன்றே!