பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

10

வெயிலுக்கு நிழலில் வீற்று விரும்பவே கனிக ளார்ந்த குயிலுக்கு மட்டும் உள்ளம் கொதித்தது, கூடாக் காக்கைச் செயலுக்குச் செவிகொ டாது சிந்தைநொந் திருந்த தங்கே, புயலுக்குப் பலியாய் விட்ட புதலென்னப் பொலிவில் லாதே!

'கோலுக்குக் கோலம் கூட்டக் கொழுந்திலை கோத்துக்கொண்டு
சூலுக்குள் ளாகித் தின்னச் சுவையான கனிகள் நல்கும் ஆலுக்கொன் றுற்ற தாயின் அனைத்துக்கு முற்ற தாகும்; காலுக்குக் கண்காப் பென்னக் காப்போமிவ் வாலை' யென்றே ,

கட்சிக ளாகி மக்கள்
களங்கண்டு பேசல் போன்று பட்சிக ளெல்லாங் கூடிப் பாங்காகப் பேசப் பார்த்து, வெட்சியைச் சூடிச் செல்லும் வீரர், கள் ளார்ந்தெழு ழுந்தே அட்சியும் சிவந்தார்த் தென்ன ஆர்த்தது வரிவண் டன்றே!

ஆலையும் அறுகை யும்சேர்த் தருமைப்பாத் திரங்க ளாக்கி நூலையுண் டாக்க நொந்து நோற்கின்ற போதும் , நோக்கார் வேலையைக் கொடுக்கத் தேநீர் வேண்டியே வருதல் கண்டுச் சாலையைப் பார்த்துச் சற்றே சஞ்சல மடைந்தேன், நானே!