பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

13

ஆட்டையுண் டாக்கும்,ஆண்பெண்
ஆடுகள் கூடி! யாங்கே மாட்டையுண் டாக்கும் மாடும்! மரம்மட்டை சந்து பொந்தில் கூட்டையுண் டாக்கும் சின்னக் குருவிகள் கதையு மிஃதே! வீட்டையுண் டாக்கும் நாமேன் வீண்செய்ய வேண்டும் நம்மை?

நேற்று நீ ரெண்ணிச் சொன்னீர்: நேர்த்தியென் றதைநா னேர்ந்தின் றேற்றுவந் துள்ளேன்; வேறா
யினியிதில் மாற்ற மில்லை! சீற்றமோ, செருக்கோ இன்றிச் செப்பினேன் திறந்து சிந்தை! போற்றவே தாலி யேற்றின் போடுவேன் மாலை,"யென்றாள்

கயந்தவம் செய்து பெற்ற
கவின் மிகு கமலச் செவ்வாய் நயம்தவம் செய்து பெற்ற நாவின்தே னருந்தி நானும், வியந்தவ னானேன் கொல்லோ ! விடையது வேறு காணப்
பயந்தவ னானேன் கொல்லோ, பலிபீட ஆடாய்ப் பார்த்தே !

"ஏவொன்றும் சொற்க ளின்றென் இதயத்தில் பதிய வே,வாய் நாவின்று வில் நா ணாக்கி நலிவொன்றத்தொடுத்து விட்டாய்! 'போ' வென்று புகன்ற தன்றிப் 'போய்விட்டுத் திரும்பி நாளை
வா'வென்றவாய்ச்சொல்லுண்டோ !
வனிதைக்கிஃதடுக்கும்சொல்லோ?