பக்கம்:பரிசு மழை.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 135 எல்லாம் இரண்டு வருஷம்தான். அவள் அங்கம் முத்து ஆகிவிட்டது. அங்கம்முத்து' என்று ஒரு சிலர் அவளை அடையாளம் காட்டினர். முன்பு பார்த்ததற்கும் இப்பொழுது பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம். அவளா இவள் என்ற தலைப்புக்கு உரிய அங்கம் வகித்தாள். "நிச்சயம் அவள் படத்தைக் காட்டினால் இவள்தான் அவள் என்று சொல்ல மாட்டீர்கள். பந்தயம் வேண்டுமானால் கட்டுகிறேன்" என்று சிலர் பேசக் கேட்க முடிகிறது. அவளோடு பேச வேண்டும் என்று தோன்றியது. "எப்படிப் பேசுவது?" வயசு பெண் அவளிடம் பேசுவது தடை செய்யப்பட்ட ஒன்று. 'வயசு பெண்ணிடம் உனக்கு என்ன பேச்சு? இந்தப் பல்லவி தடுத்தது. நம்ம அதிருஷ்டம் ஸ்கூட்டர் காரன் அவளோடு உராயச் செல்கிறான். உரசினான்; ஆனால் கோபுரங்கள் சாய்வதில்லை என்பதை எடுத்துக் காட்டினாள். சேறு மட்டும் அவளை வேறு படுத்தியது. அவன் அருகில் வந்தான். "மன்னிக்கனும்" என்று ஆங்கிலத்தில் கூறினான். 'நீ ஒரு மிருகம்' என்று பதிலுக்கு அவனைச் சாடினாள். "மறுபடியும் வா பார்த்துக் கொள்ளலாம்” என்று கனத்த குரலில் அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/137&oldid=806818" இலிருந்து மீள்விக்கப்பட்டது