பக்கம்:பரிசு மழை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 35 புதிய கார் வாங்குவதில் தவறு இல்லை என்பது அவர் அபிப்பிராயம். அவருக்குக் காசு இருந்தது; நிலபுலன் சொத்துக்கள் அவரைத் தாக்குப்பிடித்துக் கொண்டிருந்தன. அவர் மனைவியை மறக்க வேண்டி இருந்தது; அவள் நினைவு அவரை வாட்டத் தொடங்கியது. "தனக்குப் பின்னால் அவரை யார் கவனிக்கப் போகிறார்கள்?' என்ற ஏக்கம் மனைவிக்கு இருந்தது. அந்தக் கடைசி ஆசையை நிறைவேற்ற மணப்பது தேவை என்று பட்டது. இருக்கும்போது மனம் ஒருத்தியை நாடுவதுதான் தவறு; இல்லாதபோது இவர் என்ன செய்தால் என்ன? செத்தவளை அது பாதிக்கப்போவது இல்லை; தட்டிக் கேட்க ஆள் இல்லை. தலைவர்கள் சிலர் இந்தத் துறையில் அவருக்கு வழிகாட்டியாகவும் இருந்தார்கள். தவறு இல்லை என்ற அவர்கள் முடிவு அவருக்கு வழி காட்டியது. சொத்துக்காக ஒரு சிலர் சொந்தம் கொண்டாடினார் கள். அவர்கள் இவர் மருத்துவ அறிக்கைகளை நன்கு தெரிந்து வைத்திருந்தார்கள். சில அடிப்படை நோய்கள் அதற்கு ஆதாரமாக விளங்கின; பிரச்சனைகள் இல்லாத வாழ்வில் சுகம் கிடைப்பது இல்லை; வருகிறவர்களுக்கும் இவர், "எனக்கு வேறு ஒன்றும் இல்லை; சர்க்கரை ஒன்றுதான்; எப்பொழுதாவது இரத்தக் கொதிப்பு வரும்; கொலஸ்டால் இருக்கிறது என்று கூறுகிறார்கள் அவ்வளவு தான்" என்பார்; அவர் பிரமாதப்படுத்தாமல் வயதின் இயற்கூறுகள் என்று அமைதியாக ஏற்றுக் கொண்டார். அவரைக் கேட்டால் 'நோய் உள்ளவர்தான் ஒருத்தியை மணக்க வேண்டும்" என்று சொல்லிவந்தார். "கால் கை பிடிக்க யார் உதவுவார்கள்? கூப்பிட்ட குரலுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/37&oldid=806872" இலிருந்து மீள்விக்கப்பட்டது