பக்கம்:பரிசு மழை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 டாக்டர் ரா. சீனிவாசன் முதல் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒருவரை ஒருவர் தாமே அறிமுகம் செய்து கொள்ளும் முதல் இரவு அது; பெண்ணின் அழகைப் பாராட்டாமல் எந்தப் புருஷனும் இருக்க மாட்டான். சிலப்பதிகாரம் இதற்குச் சிறப்பிடம் தருகிறது. "மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! காசறு விரையே! கரும்பே! தேனே!" என்று பாராட்டியதாக அதில் கூறப்படுகிறது. "என்னை உங்களுக்குப் பிடித்து இருக்கிறதா?" என்று அவன் தொடுவதற்கு முன் இவள் கேட்டு விட்டாள். "பிடித்து இருக்கிறது உன் கம்ப்யூட்டர் படிப்பு: அது எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது” என்றான். அழகைப் பாராட்டுவான் என்று எதிர்பார்த்தாள்; அது தேவை என்ற அறிகுறியே அவனிடம் காண முடியவில்லை. அவள் பெண்ணாகப் படவில்லை; கம்ப்யூட்டர் இயக்கியாகப் பட்டாள். அவள் சோர்வு அடையவில்லை; அதனால் வருத்தப் படவுமில்லை. "இன்று கம்ப்யூட்டர் படித்தால் எங்கும் .ே லை கிடைக்கிறது, கவலையே இல்லை” என்று தன் பாராட்டுதலை முடித்தான். வாழ்க்கைத் துணை நலம் என்று வள்ளுவர் கூறியதில் இது இடம் பெறவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/58&oldid=806901" இலிருந்து மீள்விக்கப்பட்டது