பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பரிபாடல் மூலமும் உரையும் காமவெறிக்கும் கள்வெறிக்கும் காட்டிய ஒப்புமை மிகவும் நயமானது ஆகும். - விளைக பொலிக புனல் பொருது மெலிந்தார் திமில்விடக், கனல் பொருத அகிலினாவி காவெழ; நகில்முகடு மெழுகிய அளறுமடை திறந்து திகைமுழுது கமழ, முகிலகடு கழிமதியின் உறைகழி வள்ளத்து உறுநறவு வாக்குநர், 75 அரவுசெறி உவவுமதியென அங்கையில் தாங்கு, எறிமகர வலயம் அணிதிகழ் நுதலியர் மதியுண் அரமகளென ஆம்பல்வாய் மடுப்ப ; மீப்பால் வெண்துகில் போர்க்குநர், பூப்பால் வெண்துகில் சூழ்ப்பக் குழல் முறுக்குநர்; - 80 செங்குங்குமச் செழுஞ்சேறு . . பங்கஞ் செய்யகில் பல பளிதம் மறுகு படவறை புரையறு குழவியின் அவியமர் அழலென அறைக்குநர்; - நத்தொடு நள்ளி நடையிறவு வயவாளை 85 வித்தியலையில் விளைக பொலிகென்பார்; - புதுப்புனலிடத்தே மூழ்கித் திளைத்துக் களைத்த மகளிர், தாம் பற்றியிருந்த புணைகளைவிட்டுக் கரையேறினர். தம் ஈரத் தலைமயிரைப் புலர்த்துதற்காகக் கனலைமூட்டி, அதன்கண் அகிற்கட்டைகளை இட்டனர். அகில் மணம் அப்போது ஆற்றங்கரைச்சோலைகளிடமெல்லாம் பரவியது.அம்மகளிர்தம் நகில் முகடுகளிற் பூசிய சந்தனச்சேற்றின் நறுமணம் மடைதிறந் தாற்போல நாற்றிசைகளினும் முற்றவும் பரவிக் கமழ்ந்தது. பகையைத் தாக்கிக் கொல்லும் மகரமீனின் வடிவமாக அமைந்த மகரவலயம் என்னும் அணிவிளங்கும் நெற்றியினரான பெண்கள், கருமையான உறையினுள் இட்டு வைத்திருந்த வள்ளத்தைக் கள்வார்ப்பதற்காக வெளியே எடுத்தனர். மேக மூட்டத்தைவிட்டு நீங்கிய நிலவைப்போல அவ் வெள்ளிக் கிண்ணங்கள் விளங்கின. அவற்றுள் கள்ளை வார்த்துத் தம் உள்ளங்கையில் அவர்கள் தாங்கினர். அதுதான், பாம்பாற் பற்றப்பெற்ற முழு நிலவைப் போல அப்போது தோற்றிற்று. - செவ்வாம்பலைப் போலும் வாயிதழ்களில் வைத்து அவர்கள் அக் கிண்ணத்து மதுவை அருந்தியது, தேவ மகளிர் நிலவிடத்திருந்து அமுதத்தைப் பருகுவது போன்றிருந்தது. அவர்கள் உடலின் மேலாக வெண்துகிலைப் போர்த்தனர். தம் கூந்தலிடத்துப் பூவேலை செய்யப்பெற்ற வெண்துகிலைச் சுற்றிக் கூந்தலை முறுக்கி நீரைப் போக்கினர். செங்குங்குமத்தால் ஆகிய