பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| • , - புலியூர்க்கேசிகன் வையை (10) 109 ਾਂ - - செழுமையான சேற்றையும், சிதைக்கப்பட்ட அகில் துண்டு களையும், பலவகைக் கருப்பூரங்களையும் அம்மியிலிட்டு, அவையெல்லாம் ஒன்றாகக் கலக்குமாறு, குற்றமற்ற குழவிக் கல்லால் அறைத்தனர். அவ்வாறு அறைக்கும்போது, அம்மியிற் பொங்கிய செஞ்சேறானது, அவிப்பொருள்களிட்ட ஒமத்தீயின் அழலைப்போலத் தோன்றிற்று. பொன்னாற் செய்யப்பெற்ற சங்கு, நண்டு, நடத்தலைக் கொண்ட இறால், வலிய வாளைமீன் ஆகியவற்றை நீர்த் தெய்வத்திற்குக் காணிக்கையாக, அலை களோடு வருகின்ற புது நீரில் விதைத்தபடியே, கழனிகள் விளைக; அதனால் நாட்டின் வளமைகள் சிறக்க எனவும் வாழ்த்தினர், பெண்கள். . . . . சொற்பொருள் : திமில்-புணை, ஆவி-புகை அளறு சேறு. திகை - திசை. முகடு - உச்சி. அகடு - வயிறு. வள்ளம் - வட்டவடிவமான கிண்ணம். உவவுமதி - பெளர்ணமித் திங்கள். மகரவலயம் - ஒருவகைத் தலையணி. அரமகள் - தேவமகள். ஆம்பல் - செவ்வல்லி பளிதம் - கருப்பூரம் அறை அறைத்தற் குரியது; அம்மி, ஆவி யாக குண்டத்து இடும் பொருள்கள். 'விளைக பொலிக்' என்பது வாழ்த்து; இதனால் நாட்டின் செழுமையினையும் சிறப்பையும் வேண்டும் நாட்டுபற்றின் செவ்வியும் நன்கு விளங்கும். - - கண்ணெழில் இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன் நல்லது வெஃகி வினைசெய் வார்; மண்ணார் மணியின் வணர்குரல் வண்டார்ப்பத் தண்ணந்துவர்பல ஊட்டிச் சலங்குடைவார்; 90 எண்ணெய் கழல இழைதுகள் பிசைவார்; மாலையும் சாந்தும் மதமும் இழைகளும் கோலம் கொளநீர்க்குக் கூட்டுவார்; அப்புனல் உண்ணா நறவினை ஊட்டுவார்; ஒண்டொடியார் வண்ணம் தெளிர முகமும் வளர்முலை 95. கண்ணும் கழியச் சிவந்தன; அன்னவகை ஆட்டயர்ந்து அரிபடும் ஐவிரை மாண்பகழி அரந்தின்வாய் போன்ம் போன்ம் போன்ம் பின்னும் மலர்க்கண் புனல், - தமது இல்லாமைத் துயரத்தை எடுத்துக் கூறுதற்கு முன்பாகவே, தம்பால் வந்த இரவலரது இல்லாமை நிலையை நோக்கி, அவர்க்கு நல்லது செய்தலை விரும்பி, அதற்கேற்ற செயலைச் செய்தனர் சில பெண்கள். சாணை பிடிக்கப்பெற்ற நீலமணியைப் போல ஒளியோடு விளங்கும் வளைந்த தம்