பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 . - பரிபாடல் மூலமும் உரையும் அம்பி கரவா வழக்கிற்றே ஆங்கதை காரொவ்வா வேனிற் கலங்கித் தெளிவரல் நீரொவ்வா வையை நினக்கு - o நீரணி விழாவிற்கு மகளிர் திரண்டு வந்தனர். மணம் செறிந்த மலர்களைப் பொருந்தியதும், மணம் பரப்பிக் கொண் டிருப்பதுமான தண்ணிய மாலைகளை, அவர்கள் மலையனைய திம்மர்பிடத்து அணிந்திருந்தனர். அவ்வழகிய அணியோடு வேறு பலவான சிறந்த ஆபரணங்களையும் அணிந்திருந்தனர். ஒளிவிளங்கும் தகைமையோடு கூடிய, வகைமையோடு செறிவுற்ற நுண்ணிய வேலைப்பாடுகளைக் கொண்ட பொன்னரி மாலை களையும் அணிந்திருந்தனர். அவர்களோடும் வந்திருந்த ஆடவர் அவர்களோடுங் கூடியிருந்தபடியே இனிதான மதுவைப் பருகினர். அதனால் இருசாராரும் களிப்பு மிகப்பெற்றனர். நல்ல வலிமையான அறச்செயலையுடைய நாகர்களைப் போலத், தம்முள் இன்பநாட்டம் மிக்குப்பெற்றவர்களாக, நெருங்கிச் சேர்ந்து இன்புறும் பொருட்டாக, அவர்கள் ஒருவரையொருவர் அண்மினர். ஒருவருக்கொருவர் காமக்களி யாகிய இனிய மதுவினையும், ஒருவர் கண்ணில் மற்றவர் கவர்ந்து உண்டவராகத் திளைத்தனர். தாளத்தோடுங்கூடிய பாடல்களின் இன்பத்தாலே, மகிழ்ச்சியுறுகின்ற தம் செவிகளையும் நிறைத்துக் கொண்டனர். தேவர்கள், தாம் வாழும் ஒளிவிளங்கும் வானத்திடத்தே ஊர்ந்துசெல்லும் விமானங்களையும், ஒளிக்காமல் தன்னிடத்தே காட்டவல்ல தெளிவோடு வையை நீரும் சென்றது. வையையே கார்காலத்தில் கலங்கலான நீரோடும் வருகின்ற நீதான், இவ்வாறு தெளிந்த நீரோடும் வருகின்ற இயல்பையும் உடையையாய் இருக்கின்றனையே. நின்தன்மை ஒரு தன்மைத்தாக என்றும் இருப்பதில்லையே! இது எதனாலோ? சொற்பொருள் : நீரணி நீராடுதற்குரிய அணிகள் வெறி நாற்றம். கமழ் மணக்கும். ஏர் - அழகு. பொலம் - பொன்.பாகர் இனிமை, களி-களிப்பு வளவினை சிறந்த அறச் செயல்கள். சீர் - தாளம் தெவி நிறைந்து ஊர் பாடும் ஊர்பு ஆடும் ஊர்ந்து செல்லும். கார் - கார்காலம். அம்பி - விமானம். நீர் தன்மை. - விளக்கம் : தன்பால் நீராட வந்து கூடிய மகளிரும் ஆடவரும் தம்முட்களிவெறிகொண்டு மயக்கமுறச் செய்வ தேனும், வையை தன்னளவில் தெளிந்தநீரைக் கொண்டுள்ளது என்பதாம். தைந்நீர் ஆடுதல் கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கப் பனிப்படு பைதல் விதலைப் பருவத்து - 75