பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46giâ€ಹಕಿಹ67 女 திருமால் (15) . - 151 மடமயில் இளமயில்.குருகு-குருக்கத்தி.பாண்டில்-தாளக்கருவி. சிலம்பிசை-எதிரொலிக்கும் இசை நயம், கேழ்-நிறம் ஒன்னார் - பகைவர்; அவுணர். - - விளக்கம் : திருமால் கோயில் கொண்டுள்ள அதனாலேயே மலைப்பகுதிகள் அழகுபெற்று விளங்குகின்றன. அவனை. வெண்டிப் பெறாது, தாமாகவே வந்தெய்தப் பெற்றவை அச் சிறப்புக்கள். இங்ங்னமாக, அவனை வேண்டி வழிபாடுவார் பெறுகின்ற பயன் அத்துணைப் பெரிது என்பதாம்.காமக் கடவுள் ஆசைகளை நிறைவு செய்து அருளும் கடவுளும் ஆம் . . . செய்வீராக! . . . தைய லவரொடும் தந்தா ராவரொடும் கைம்மக வோடும் காத லவரொடும் தெய்வம் பேணித் திசைதொழுதினிர் சென்மின் புவ்வத் தாமரை புரையுங் கண்ணன் - வெளவற் காரிருள் மயங்குமணி மேனியன் 50 எவ்வயின் உலகத்தும் த்ோன்றி, அவ்வயின் - மன்பது மறுக்கத் துன்பம் க்ளைவோன் அன்பது மேள இருங்குன்றத்தான்; - மாந்தரே! இல்லத் துணைவியரோடும், தாய் தந்தைய ரோடும், க்ைககுழந்தையோடும், அன்புச் சுற்றத்தாரோடும், திருமாலிருஞ்சோலை மலையினையே.தெய்வமாகக் கொண்டு, அது விளங்கும் திசையை நோக்கியே தொழுதவராக, அவனை வழிபடச் செல்வீராக . . - - -- தன் திருவுந்திக்கண்ணே ஆதிநாளில் தோன்றிய செந்தாமரை மலரைப் போலத் தோன்றும் செவ்விய கண்களை உடையவன் அவன்; கடல் நீரைக் கவரும் கார்மேகம், இருள், நீலமணி ஆகியவற்றைப் போன்று விளங்கும் திருமேனி வண் ணத்தைக் கொண்டவன் அவன், எவ்வகைப்பட்ட உலகத்தும் தோன்றி, அவ்விடத்து மக்களுக்கு மயக்கத்தாலே சென்றடையும் துன்பங்களை ஒழிப்பவன் அவன். அவனே இவ்வுலகினரிடத்தும் அன்பு பொருந்தியவனாக, இப் பெருங் குன்றிடத்தேயும் கோயில் கொண்டுள்ளான்! சொற்பொருள் : தையலவர் - மனையாட்டியார். தந்தார் . தாய் தந்தையர் காதலர் - அன்புச் சுற்றததார். புவ்வம்- தொப்புள். மயங்கும் - ஒக்கும். மன்பது - மக்கள் கூட்டம். மறுக்கம் - மயக்கம். அன்பது - அன்பு. மேஎ விரும்பி, விளக்கம் : பெருமானைக் குடும்பத்தோடும் சென்று தொழுது பயன் பெறுங்கள்’ என்று மக்களனைவரையும் அழைக்கின்றார் ஆசிரியர். • *