பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 பரிபாடல் மூலமும் உரையும் நின்றிருந்த மகளிர் கூட்டத்துள் அப் பரத்தை ஒளிந்தாள். இவர்க்ளும் அவளைத் தேடியவராக அக்கூட்டத் துட் புகுந்து சென்று, அவளையும் அணுகினர். இவ்வாறு தொடர்ந்து வருபவரைக் கண்ட அவள் தானும் மேலும் ஒடவியலாத நிலையின்ை அடைந்ததும், நின்றாள். அற வாழ்வுக்குமாறுபட்ட பரத்தையின் மகளான அவள், அவர்களை எதிர்த்து வழக்காடவும் துணிந்தாள். மிகவும் மாறு பட்டவளாக, 'ஏன் என்னையே தொடர்கின்றீர்?’ எனச் சினத்தோடும் கேட்டாள். . தோழியர் செல்ல, அவர்பின் தானும் யாதுமறியாளாகச் சென்று கொண்டிருந்த தலைவி, நெருங்கிய பல்வரிசையினை உடையாள். அவள் அப் பரத்தையின் கேள்வியைக் கேட்டதும், சித்தத்தே திகைப்புற்று, யாதும் பேச்செழாதவளாக அப்படியே நின்றுவிட்டாள். - - - சொற்பொருள் : ஒய்ய ஒளிந்து கொள்ள உறழ்ந்தோள் - மாற்றாள். மடுத்தல் பகுதல் தெய்ய என்பது அசை நெறிமணல் - நெறிப்பட்ட மணல்மேடு, நேடினர் - தேடினராக சொல்லேற்று - சொல்லாடலை மேற்கொண்டு. பெண் நிரை - பெண்கள் கூட்டம் வல்லுறழ்வு-மிகவும் மாறுபட்டு மறலினாள்-மறுத்துப் பேசினாள். - விளக்கம் : முதலில் நாணி ஒளிந்து கொள்ள முயன்றாலும், பின்னர்த் தான் மடக்கப்பட்ட நிலையில் சொல்லேற்று வழக்காடத் துணிந்த நிலையும், ஆனால் அவளுக்கு எதிரே பேச் செழாதவளாக நின்றாளான தலைவியின் பண்புசெறிந்த நிலையும் சிந்தனைக்கு உரியன. - - சொற்போர் ஆயத் தொருத்தி அவளை அமர்காம மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக்கணிகை; பெண்மைப் பொதுமைப் பிணையிலி! ஐம்புலத்தைத் 50 துற்றுவ துற்றும் துனையிதழ் வாய்த் தொட்டி! முற்றா நறுநறா மொய்புனல் அட்டிக் - காரிகைநீர் ஏர்வயற் காமக் களிநாஞ்சில் மூரி தவிர முடுக்கும் முதுசாடி! - மடமதர் உண்கண் கயிறாக வைத்துத் * - 55 தடமென்தோள் தொட்டுத் தகைத்து மடவிரலால் இட்டார்க்கு யாழார்த்தும் பாணியில் ஏம்மிழையைத் தொட்டார்த்தும் இன்பத் துறைப்பொதுவி கெட்டதைப் பொய்தல் மகளிர்கண் காண இகுத்தந்திவ்