பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 . - - பரிபாடல் மூலமும் உரையும் மார்ச்சனையமைந்து ஒலிக்கும் மத்தளத்தின் அமைவோடு ஒத்ததும், விரும்பத்தகுந்த அழகினை உடையதுமான தோள்களைக் கண்டவர்க்கு, அவர்களுடைய உள்ளம் அத் தோள்களின் வனப்பையே எண்ணி, அவற்றின் பின்னாகச் செல்லுதலே நிகழும். அஃதன்றி, நெஞ்சந்தான் தமக்கு உரிய தாய் தம்மோடு கூடி இருக்குமோ? இருக்காது காண்! - சொற்பொருள் : மண் மார்ச்சனை. இசைக்கும் ஒலிக்கும். முழவு - மத்தளம். கண்ண்ாது கருதாது. காரிகை பேரழகு. குறிப்பு : நம்பியகப் பொருள் உரையில், இவ்வடிகள் மேற் கோளாக வந்துள்ளன. - ஐந்தர்ம் பாடல் முன்புற்று அறியாமுதற்புணர்ச்சி மொய்குழலை இன்புற்று அணிந்த இயலணியும் வன்பணியும் நாணெனும் தொல்லை அணியென்ன நன்னுதலை! முன்னர்ப் பெற்றறியாத இன்பமாகிய முதற்கடிட்டத்தின் இன்பததைப் பெற்றாள். வண்டு மொய்க்கும் பூங்குழலினாளான ஒரு கன்னிப் பெண். அதனால் அவளுடைய பழைய ஒப்பனைகள் கலைந்தன. அவளைக் கூடி இன்புற்று மகிழ்ந்த தலைவன், அவள் முன்னர் அணிந்த சிறந்த அணிகளையும், நகைகளையும் அவ் வாறே அணிந்து விட்டான். அதனைக் கண்டு அவள் நாணினாள். அவன், நன்னுதலாய்! நீதான் நாணாதே! பழையபடியே அணிசெய்துள்ளேன் என்று கூறி, அவளைத் தேற்றுகின்றான். சொற்பொருள் : முன்பு - அதற்கு முன்பு. மொய்குழல் - வண்டு மொய்க்கும் கூந்தல். இயல் அணி - அசையும் அணி வகைகள். வன்பணி - புதிய அணிகலன்கள். - குறிப்பு : நம்பியகப்பொருள் உரையிற் கண்டன இவ் அடிகள். - ஆறாம் பாடல் மதுரை உலகம் ஒருநிறையாத் தானோர் நிறையாகப் புலவர் புலக்கோலால் தூக்க - உலகனைத்தும் தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன் நான்மாடக் கடல் நகர். . . . . உலகனைத்தையும் ஒரு தட்டிலே ஒரு நிறையாகவும், மதுரையை மற்றொரு தட்டிலே ஒரு நிறையாகவும், புலவர்கள் அறிவென்னும் துலாக்கோலிலே இட்டுத் துக்கிச் சமன் கண்டனர். அக்காலத்தே, உலகனைத்துமுள்ள தட்டுத்தான் வாடி