பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 புலியூர்க்கேசிகன்-பாடிய சான்றோர்கள்- 243 படைக்கலப் பெயரும், காவலரண்களுக்கு வழங்கும் எயில்’ என்னும் பெயரும், இவர்களின் காவற்றிறன்ையும் மறமாண் பையும் ஒட்டி அமைந்த பெயர்களே எனலாம். இக்குடியினருள் ஒருவனாகிய எயினன் என்பான் தமிழகக் குறுநில மன்னருள் ஒருவனாகத் திகழ்ந்தான் என்பதும், அவனுக்குரிய வாகைப் பட்டினம் சிறந்த காவலுடையதாகத் திகழ்ந்ததென்பதும் சங்கநூற்களால் அறியப்படும் செய்திகளாகும். - இவர்களைக் குறவர் குடியினர் எனவும் கூறுவர். இக் குடியினராகக் கடுவன் இளவெயினனார் ஆகிய இவரன்றியும், எயிற்றியனார், எயினந்தையார், இளவெயினனார், கழார்க் கீரன் எயிற்றியனார், குறமகள் குறியெயினியார், புல்லாற்றுார் எயிற்றியனார், பேய்மகள் இளவெயினியார், விற்றுாற்று மூதெயின்னார் என்னும் புலவர்கள் பெயர்களையும் சங்க நூற்களுட் காணலாம். இதனாற் குறவர் குடியினர். இக் காலத்தே காணப்படுவதுபோலப் பிற்பட்ட குடியினராக விளங்காமல், அக் காலத்தே செழுமையான நல்வாழ்வும், அறிவாற்றலும், மறமாண்பும் கொண்ட தமிழ்ப் பழங்குடியினருள் ஒருவராகவே திகழ்ந்தனர் எனலாம். தமிழ்ச் சான்றோராகவும் இவர்களுட் பலர் விளங்கிய சிறப்பும், மகளிரும் புலமைச் செல்வியராகத் திகழ்ந்த சால்பும் இக் குடியினரது பண்டைச்சிறப்பை நமக்கு அறிவுறுத்துகின்றன. மேலும், வடமொழிக்கண் இராமகாதை யைச் செய்தவரான வான்மீகியார் என்னும் முனிவரும் இக் குடியினரே என்பதையும், காலத்தை வென்ற பெருஞ்சிறப்புடன் போற்றப்படும் அக்காவியத்தின் சிறப்பையும் எண்ணும்போது, இக் குடியினரின் அறிவுநலச் சிறப்பு மிகவும் நன்றாக விளங்கும். இக் குடியினர் குறிஞ்சி முல்லை ஆகிய இருவகை நிலப் பாங்கிலும், ஆதிநாளில் வேட்டையாடி வாழ்ந்துவந்த வாழ்க்கையினர் என்றோம், இதனாற், குறிஞ்சிக்குமரனைத் தம் மருமகனாகக் கொண்டு போற்றிய இவர்கள், முல்லைக்குரிய திருமாலையும் தம்மவருள் ஒருவனாகவே, தம்குடித் தலை வனாகவே கொண்டு போற்றி வாழ்ந்தனர். தென்பாண்டிச் சீமையில் விளங்கும் நம்பிமலையும் நம்பியின் திருக்கோயிலும், அவன் மகளை மணந்து வள்ளியூரில் திருக்கோயில் கொண்டுள்ள முருகப்பிரானின் செய்தியும், இந்த இருமையும் ஒருமையான உறவுப்பாங்கைக் காட்டுவதாகும். இதற்குச் சான்று பகர்வாரைப்போல, இப்புலவர்.பெருமானும் திருமாலையும், மால் மருமகனாகிய முருகப் பெருமானையும் பரிபாடல்களாற் போற்றிப் பாடியுள்ளார். . . . ஆதி பகவன் முதற்றே உலகு என்னும் அரிய தத்துவப் பொருளை விளக்குவாரைப்போல - -