பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் பாடிய சான்றோர்கள் . 255 - பரிபாடல்களுக்குப் பண் வகுத்தோர் - (எண்கள் - பாடல் எண்கள்) முத்தும் முத்தமிழும் சிறப்புற்று விளங்கிய திருநாடு பாண்டியவளநாடு. முத்தமிழின் ஒரு கூறு இசைத்தமிழ். இதன் வளர்ச்சி பண்டை நாளிலே மிகச் செப்பமும் செழுமையும் பெற்றிருந்தது. இதனைச் சிலப்பதிகாரத்து அரங்கேற்று காதை, கானல் வரி என்பவற்றுக்கு எழுதிய உரைகளுள் ஆசிரியர் அடியார்க்கு நல்லார் எடுத்துரைக்கின்றனர். - - எண்ணற்ற இசைக் கருவிகள் அக்காலத்தே வழக்காற்றில் இருந்து வந்தன. எனினும் அவற்றுக்கெல்லாம் நாயகமாகத் திகழ்ந்தது யாழ்' என்பதாகும். யாழின் இந்தச் சீரினைத் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரவர்கள் மிக விரிவாக ஆராய்ந்தெழுதிய கருணாமிருத சாகரத்தாலும், விபுலாநந்த அடிகளார் நுண்மையாக ஆய்ந்தெழுதிய யாழ்நூலாலும், தஞ்சை வரகுண பாண்டியனாரின், பாணர் கை வழி என்னும் நூலாலும் தெளிவாக அறியலாம். - - - "பாலை பிறக்குமிடத்துக் குரலும் துத்தமும் இளியும் நான்கு மாத்திரை பெறும். கைக்கிளையும் விளரியும் மூன்று மாத்திரை பெறும், உழையும் தாரமும் இரண்டு மாத்திரை பெறும்" என்று பாலையாழின் பிறப்பைப்பற்றி உரைப்பார்கள், பேரியாழ் (நரம்புகள், 12) மகர யாழ் (19 நரம்புகள்), சகோடயாழ் (14 நரம்புகள்), செங்கோட்டியாழ் (7 நரம்புகள்) என யாழின் அமைப்பு. நான்கு வகைப்படும். இவை பண்டைநாளில் வழக்காற்றிலிருந்தன. ஆய்ச்சியர் குரவையுள்வரும் ஆயப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப் பாலை, வட்டப் பாலை என்பன, மற்றொருவகை இசைமரபை உணர்த்துகின்றன. . . 'பாண்வாய் வண்டு நோதிறம் பாட' என்னும் வாக்கு நோதிறத்தின் சாயலைக் காட்டும். 'காந்தாரப் பண்’ என்பது எடுப்பான நடையுடையதாகும்.வரையறுத்துள்ள 103 பண்களுள் மூன்று பண்களே இந்நூலிற் பயின்று வந்துள்ளன. - இனி, இவ்விசை நுட்பங்களை அறிந்து, இப் பாடல் களுக்குப்பண்வகுத்த சான்றோர்களைப் பற்றிச்சிறிது காணலாம். நன்னாகனார் - 2 - - புறத்திணை நன்னாகனார் என்னும் சான்றோரும் இவரும் . . வேறானவர் ஆவர். இவர் நாகர் மரபினர். இசைத்துறையில்