பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் திருமால் ~ (2) 21 குலைகள் எல்லாம் அறுபட்டுத் தரையிடத்தே வீழ்ந்து சிதறு வதைப்போலப், பகைவரின் தலைகள் பலவும் அறுபட்டுச் சிதறி வீழ்ந்தன; வலியிழந்தன. சாய்ந்து, ஒரு முறையாகக் கொய்யப் பட்டுக் கூடி ஒருங்கே உருண்டு பிளந்து சிதைந்து, விழுந்து, சிதறி உருண்டு ஓடின, அத் தலைகள். அவ்வாறு அவை அறுபட்டு வீழ்ந்தபோது, அவற்றினின்றும் வெளிப்பட்ட மூளையும் இரத்த முமாகிய சேறு நிலத்திலே எங்கனும் பரவியது. இவ்வாறு, பகைவரது இனிய உயிரைப் போக்கும், வெற்றிப் போரையுடை தலைவனே! நின் வலிமைதான் என்னே! சொற்பொருள் : ஒடிதல் தளர்தல்; சோர்தல் உள்ளம் - உள்ளச் செருக்கு உருத்து. சினந்து இயைந்து-பொருந்தி கழறும் - முழக்கும்; இது போர்முழக்கம். படிநிலை-தரையில் நின்ற நிலை. வளை - சங்கம். குருகு குருத்து பனங் குருத்தின் உருவத்திற்கு உவமை. குலை - காய்க் குலைகள். அளறு சேறு மூளையும் குருதியுமாகிய சேறு. சேரார். பகைவர். இன்னுயிர் - இனிதான, உயிர். குருசில் தலைவ. படை - சக்கரப்படை - விளக்கம் : எதிர்த்தாரின் தலைகளை அறுபட்டு வீழும் பனங்காய்களைப் போலச் சிதறி வீழுமாறு வெட்டி வீழ்த்தி, அவர் செருக்கடக்கி, உயிரைப் போக்கிய போர்வெற்றியை உடைய தலைவன் திருமால் မြှို இதனால், அவனை நம்பி, அவனடி சேர்ந்தோர்க்குப் பகைவரால் வரும் துயரமும் இல்லை என்பதுமாம். - - கருடக் கொடியாய்! ஒன்னார் உடங்குண்ணும் கூற்றம் உடலே; பொன்னேர் பவிரழல் நுடக்குதன் நிறனே, நின்னது திகழொளி சிறப்பிருள் திருமணி, கண்ணே, புகழ்சால் தா ரை யலிரினைப் பிணையல்; வாய்மை வயங்கிய வைகல், சிறந்த நோன்மை நாடின் இருநிலம்; யாவர்க்கும் 55 சாயல் நினது வான்நிறை என்னும் நாவல் அந்தணர் அருமறைப் பொருளே! அவ்வும் பிறவும் ஒத்தனை, உவ்வும் . எவ்வயி னேர்யும் நீயே - செவ்வா யுவனத் துயர்கொடி யோயே! -60 நின் சக்கரப்படையின் உடலானது, பகைவரின் உயிர்களை ஒருசேர உண்ணுகின்ற கூற்றம் ஆகும். பொன்ன்ை உருக்கும் பொழுது எழுகின்ற செந்திச் சுடரினைப்போல ஒளியகைந்து தோன்ற, விளங்கும் அதன் திறன். -