பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் திருமால் வாழ்த்து (4) - - 39 மறைந்திருந்த இவ்வுலகினைச் சுமந்து வெளிக்கொணர்ந்து நிலைநிற்கச் செய்தனை அச் செயலது தன்மை முற்கூறிய மேருமலையின் செயலுக்குச் சமானமாகும். - - சொற்பொருள் : புருவத்து பழங்காலத்து பூருவத்து என்பது குறுக்கல் விகாரம் பெற்றது. கந்தம் - கழுத்து. பலர் புகழ் குன்று - மேருமலை, அது உலகைச் சாயவிடாது நிறுத்திக் காத்து நிற்கின்றது என்பர். | - - . . பிரிந்து சார்வன - நின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றுள: 25 நின், தண்மையும் சாயலும் திங்களுள'; - நின், சுரத்தலும் வண்மையும் மாரியுள: நின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்துள: நின், நாற்றமும் ஒண்மையும் பூவையுள; நின், தோற்றமும் அகலமும் நீரிலுள ; 30 நின், உருவமும் ஒலியும் அகாயத்துள ; r நின், வருதலும், ஒடுக்கமும் மருத்தினுள: அதனால், இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும் ஏம மார்ந்த நிற் பிரிந்து மேவல் சான்றன எல்லாம்; . 35 அனைத்தையும் அழிக்கின்ற நின் வெம்மையும், அனைத் தையும் விளக்கமுறச் செய்யும் நின் விளக்கமும், ஞாயிற்றிடத்தே பொருந்தியுள்ளன. i அனைவருக்கும் அருளுகின்ற நின் குளிர்ந்த நோக்கும், மென்மைப் பண்பும் திங்களிடத்தே அமைந்துள்ளன. அனைவர் - பாலும் ஒப்பாக அருள்சுரக்கும் நின்னியல்பும், நின் கொடைக் குணமும் மழையினிடத்தே பொருந்தியுள்ளன. நின் காக்கும் தன்மையும், பொறுமைப் பண்பும் பூமியினிடத்தே விளங்கு கின்றன. - - நின் மணமும் ஒளியும்'காயாம்பூவிடத்தே விளங்குகின்றன. நின் தோற்றமும் பரப்பும் கடலிடத்தே அமைந்துள்ளன. நின் நுண்ணுருவமும், ஒலியும் ஆகாயத்திடத்தே பொருந்தியுள்ளன. நின் பிறப்பும் ஒடுக்கமும் காற்றிடத்தே அமைந்துள்ளன: - இவ்வாறு, அமைந்துள்ளதனாலே, - - இவையும் உவையும் அவையுமாகிய எல்லாப் பொருள் களும், தமக்குக் காவலாகப் பொருந்திய நின்னிடத்திருந்து பிரிந்து, மீளவும் நின்னை வந்தே அடைவனவாக உள்ளன். - சொற்பொருள் : விளக்கம் - ஒளிப்பாடு, தண்மை - குளிர் நோக்கம். சாயல் - மென்மை. சுரத்தல் - அருள்தல். வண்மை -