பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. . . ပါမ္ယံန္ဟိခေါဒ၏။ * ဓါဒါပေ၏၊ (8) 77 எட்டாம் பாடல் செவ்வேள் ை பாடியவர்: நல்லந்துவனார் பண் வகுத்தவர்: மருத்துவன் நல்லச்சுதனார்; பண் : பாலையாழ். - பரங்குன்றமும் இமயமும் மண்மிசை அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப் புள்மிசைக் கொடியோனும் புங்கவம் ஊர்வோனும் மலர்மிசை முதல்வனும் மற்றவனிடைத் தோன்றி உலகிருள் அகற்றிய பதின்மரும் இருவரும் - மருந்துரை இருவரும் திருந்துநூல் எண்மரும் 5 ஆதிரை முதல்வனிற் கிளந்த - நாதர்பன்னொருவரும் நன்திசைகாப்போரும் யாவரும் பிறரும் அமரரும் அவுனரும் - மேவரு முதுமொழி விழுத்தவ முதல்வரும் பற்றாகின்று நின் காரணமாகப் 10 பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும் - நிலத்திடத்தே தோன்றி மலர்கின்றதான். திருத்துழாய் மலரினையும், செந்தாமரை மலரானது தந்த செல்வத்துக்கு, உரியவளான திருமகளையும், புட்களிற் சிறந்ததான கருடனுருவம் எழுதப்பெற்ற கொடியையும் உடையவன் திருமால். அவனும், இடபஊர்தியை உடையவனாகிய சிவபிரானும், தாமரை மலர்மீது இருப்போனாகிய நான்முகனும், அவனிடத் திருந்தும் தோன்றி. உலகத்தின் இருளைப் போக்கியவரான ஆதித்தர் பன்னிருவரும், தேவ மருத்துவர்கள் இருவரும், சிறந்த நூற்புலமை கொண்டோரான வசுக்கள் எண்மரும், ஆதிரை முதல்வனாகிய சிவபிரானது பெயராலேயே சொல்லப் படுகின்றவரான பதினொரு உருத்திரரும், நல்ல திசைகளைக் காப்போராகிய இந்திரன், நிருதி, இயமன், அக்கினி, வருணன், வாயு, குபேரன், ஈசானனாகிய எண்மரும், மற்றுமுள்ள தேவர்கள் யாவரும், இவரொழிந்த அமரரும் அவுணரும் ஆகிய பிறருமாகிய எல்லாரும், விரும்பத்தக்க வேதங்களைக் கற்ற சிறந்த தவமுதல்வர்களாகிய எழுவரும், நின்னைக் கண்டு போற்றும் பொருட்டாக இத் திருப்பரங்குன்றத்திற்கு வருபவராகின்றனர். ஆதலினாலே, இப் பர்ங்குன்றமானது எம் பெருமானாகிய சிவபிரான் குடிகொண்டிருக்கும் இமயக்குன்றமாகிய திருக் கயிலாயத்தையே ஒப்புடையதாக விளங்குவதாகும். சொற்பொருள் : மண் நிலவுலகம் மலர் தரு செல்வம் - பரந்த செல்வமும் ஆம் புங்கவம் ஆனேறு. புள் கருடப்புள். மேவரு விரும்பத்தக்க முதுமொழி - மறை. - - - |