பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

சமாஜ அறிக்கைகள், சைவசமய விழாக்கள், அது தொடர்பான கருத்துகள், திருமுறை மற்றும் சாத்திர நூலாய்வுகள், சமய விவாதங்கள், சைவ சமயக் கட்டுரைகள், அரிய நூல்கள் என இவ்விதழ் வெளிவந்து கொண்டு இருக்கின்றது. சித்தாந்தம் A4 அளவில் வெளிவந்த காலத்தில் கிரௌன் அளவில் அனுபந்தப் பகுதி வெளிவந்துள்ளது. ஒவ்வொரு அனுபந்தப் பகுதியிலும் 16 பக்கங்கள் இடம்பெற்றிருந்தன. இவ்விதழில் தனிப்பக்க எண்ணுடன் திருவாசகம், சித்தாந்த சாத்திரங்கள் வெளிவந்துள்ளன. பின்னாளில் இவை தனிநூலாக்கவும் பெற்றுள்ளன. ஆனால், இவை சுவடிப்பதிப்புகள் அல்ல.

சித்தாந்தம் இதழில் அச்சில் விடுபட்ட அப்பர்பாடல், அணிமுருகாற்றுப்படை,அருட்பாமாலை, அருள்முருகாற்றுப்படை, அருள்முறைத்திரட்டு, இலந்துறை அருட்பாமாலை, கரவகுப்பு, கருணையந்தாதி, களவகுப்பு, கூந்தலூர் அருட்பாமாலை, கோமதி அந்தாதி, சக்தி வகுப்பு, சிறுவேளூர் அருட்பாமாலை, சொரூப வகுப்பு, ஞானசாரம், ஞானாமிர்தம் -மூலமும் விளக்கவுரையும், தசகாரியம், தணிகைவெண்பாவுரை, திருஈங்கோய்மலை எழுபது, திருக்குணமங்கலம் அருட்பா மாலை, திருநெறி விளக்கம், திருப்புகளூர் அருட்பாமாலை, திருப்புகழ் - வெளிவராத இருபாடல்கள், திருவாவடுதுறை குருபரம்பரை, திருவான்மியூர் சிவபெருமாள் பதிகம், திருவிடை மருதூர் அருட்பாமாலை, திருவிளையாடற் கருணைத் திருவிருத்தம், பஞ்சாக்கரமாலை, பிராசாத அகவல், பொருள் முருகாற்றுப்படை, முப்பந்தொட்டியுலா, வருமுருகாற்றுப் படை ஆகிய முப்பத்திரண்டு சுவடிப்பதிப்புகள் வெளிவந்து உள்ளன.

சக்தி

வை.கோவிந்தனால் 1939ஆம் ஆண்டு சக்தி காரியாலயம் சென்னையில் நிறுவப்பெற்றது. நூல் வெளியீட்டுத் துறையில் வரலாறு படைத்த இந்நிறுவனம் பல்வகைத் தலைப்புகளில் பயனான பொருள்கள் பற்றி 250 நூல்களை வெளிக்கொணர்ந்து உள்ளது. பாரதியார் கவிதைகள், திருக்குறள் பரிமேலழகர்