பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

95

உரை, கம்பராமாயண காண்டங்கள், நாவல்கள் மற்றும் புதிய புதிய நூல்களைப் படைத்துத் தந்த பெருமைக்கு உரியது இந்நிறுவனம்.

'சக்தி' எனும் திங்களிதழ் அ. கிருஷ்ணமூர்த்தியை ஆசிரியராகக் கொண்டு இந்நிறுவனத்தின் வெளியீடாகச் சென்னையிலிருந்து 1939ஆம் ஆண்டு ஆவணி முதல் வெளிவந் துள்ளது. முதல் ஐந்து மலர்கள் டபுள்கிரௌன் அளவிலும், ஆறாவது மலரிலிருந்து கிரௌன் அளவிலும் இவ்விதழ் வெளிவந்திருக்கின்றது. மனித சமுதாயம் முழுமை பெறும் ஞானத்தையும், அருளறிவு, பொருளறிவு கடவுட்கலை இயற் கலை ஆகியவற்றையும், அறிவு தொழில் விடுதலை ஆகிய மூன்று சக்திகளையும் புகட்ட வல்லதாக இவ்விதழ் அமையும். இதனை இவ்விதழாசிரியர், "மனித சமுதாயம் பூரணம் பெறுவதற்கு, ஆத்ம ஞானமும் வேண்டும், லௌகிக ஞானமும் வேண்டும். அருளறிவு, பொருளறிவு, கடவுட்கலை, இயற் கலை ஆகியவற்றைச் சக்தி தூண்டுவாள். மடமை, வறுமை, அடிமைத்தனம் இம்மூன்றும் நமது நாட்டைத் துன்புறுத்தும் இடர்களாம். இவற்றை நீக்க அறிவு, தொழில், வீரசுதந்திரம் ஆகிய மூன்று சக்திகள் வேண்டும். நமது சமுதாயத்தில் பல மாசுகள் படிந்து ஒற்றுமையைக் கெடுக்கின்றன. அம்மாசுகளை அறவே நீக்கச் சுத்த சன்மார்க்க சக்தியைத் தூண்டவேண்டும். இவ்வாறு எத்தனையோ அரும்பணிகள் உள்ளன. காலத்தின் தேவைக்கும் மாறுதலுக்கும் ஏற்றபடி, நாட்டின் புதிய முன்னேற் றத்தைக் கருதிச் சிறந்த அறிவாளிகளின் கூட்டுறவால் சக்தி பல துறைகளிலும் தன்னால் இயன்ற பணி செய்யவே தமிழர் முன் தோன்றுகிறாள் (சக்தி, 1:1:1939,ப.3) என்று குறிப்பிடு கின்றார்.

சக்தியின் முதல் இரண்டு மலர்களில் மட்டுமே பழந் தமிழ் நூற்பதிப்புகள் இடம்பெற்றுள்ளன. ஏனைய இதழ்களில் சுவடிப்பதிப்புகள் எதுவும் வெளிவரவில்லை. சைலாச நிகண்டு சூளாமணி, சாத்தூர் நொண்டி ஆகிய இரண்டு சுவடிப் மேலும் பதிப்புகள் இவ்விதழில் வெளிவந்துள்ளன.

.