பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

97

இவ்விதழின் முக்கிய நோக்கமாக இருக்கின்றது. மேலும் சமண சமய நூல்களைப் பதிப்பிப்பதையும் தம் பணியாகக் கொண்டிருக்கின்றது.

சமண இளைஞர் மன்றச் சுவடிப்பதிப்புகளாக அவிநயம், அமுதசாகரம், இந்திரகாளியம்,தொல்காப்பிய ஒப்பியல், நரிவிருத்தம், அருகன் அந்தாதி, அருங்கலச் செப்பு, திருக்குறள் மூலம் போன்றவை வெளிவந்துள்ளன. இவை யல்லாமல் 'முக்குடை' இதழிலும் சில பதிப்புகள் வெளிவந்து உள்ளன. குறிப்பாக, திருமயிலாபுரிப் பத்து, தீபங்குடிப் பத்து,வீரபுரப் பத்து ஆகிய மூன்று சுவடிப்பதிப்புகளைக் குறிப்பிடலாம். ஆ. அரசு நிறுவனப் பருவ இதழ்கள்

இந்திய விடுதலைக்குப் பிறகு உருவாக்கப்பெற்ற அரசு நிறுவனங்கள் பல உண்டு. அவற்றில் கல்வித்துறை சார்பானவை சில. தமிழ்நாடு அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை, தமிழ்வளர்ச்சிக் கழகம், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை அரசாங்க அறநிலையப் பாதுகாப்புத்துறை (தமிழ்நாடு அரசு அறநிலையப் பாதுகாப்புத்துறை), தொல்லியல் ஆய்வுத் துறை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் போன்ற அரசு நிறுவனங் களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தமிழின் - தமிழகத்தின் பெருமையையும் கலைச்செல்வங் களையும் உலகுக்கு உணர்த்தும் உன்னத நோக்கோடு இந்நிறுவனங்கள் செயலாற்றி வருகின்றன. தங்களின் ஆய்வு முடிபுகளையும் அரிய கண்டுபிடிப்புகளையும் வெளிப்படுத்தத் தங்கள் நிறுவனத்திற்கெனத் தனித்தனியே இதழைத் தொடங்கியுள்ளன. அரசு நிறுவனங்கள் வெளியிட்ட பருவ இதழ்களில் சுவடிப்பதிப்புகள் இடம்பெற்ற பருவ இதழ்களை அரசு நிறுவனச் சுவடிப்பதிப்புப் பருவ இதழ்கள்' என்கின்றோம். தமிழ்நாட்டு அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை (கல்வெட்டு), சென்னை அரசாங்க அறநிலையப் பாதுகாப்புத்துறை (திருக்கோயில்), உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் (தமிழியல்)