பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

5

மணியன், மு.கோ. இராமன், ச. சிவகாமி, அன்னிதாமசு, தா.வே. வீராசாமி, ஏ.என்.பெருமாள், பூ. சுப்பிரமணியம், தி.மகாலட்சுமி, சூ. நிர்மலாதேவி, தெ.பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, சு.சௌந்தரபாண்டியன், இ.சுந்தரமூர்த்தி,தி.வே. கோபாலையர், வீ.சொக்கலிங்கம், அ.மா. பரிமணம்,ம. சீராளன், சி.கோ. தெய்வநாயகம், ச.திலகம், மா.சத்தியபாமா, இரா.நாகசாமி, ய.மணிகண்டன், அ.இராசேந்திரன்,ச.பால சாரநாதன், வி.மு. சுப்பிரமணிய ஐயர், கி. ஜெகந்நாதாச் சாரியார், அ.விநாயகமூர்த்தி, எஸ். ஸ்ரீநிவாசையர், வை.தி. நடராசன், ஆ. தசரதன், எஸ். முத்துரத்ன முதலியார், இரா.மா. கோவிந்தசாமிப் பிள்ளை போன்றோரும் சுவடிப்பதிப்புகளை வெளியிட்ட வர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

மேலும், தருமபுர ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், பேரூர் ஆதீனம், திருப்பனந்தாள் காசித்திருமடம், கோவை கௌமார மடம், பழநி தேவஸ்தானம், மதுரைத் தமிழ்ச்சங்கம், புதுவைத் தமிழ்ச்சங்கம், தஞ்சைத் தமிழ்ச்சங்கம், மதுரை மாணவர் செந்தமிழ்ச்சங்கம், கோவைத் தமிழ்ச்சங்கம், கரந்தைத் தமிழ்ச்சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம், தஞ்சை சரஸ்வதிமகால் நூலகம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னை உ.வே. சாமிநாதையர் சுவடிகள் நூலகம், சென்னை அடையாறு நூலகம், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகம், திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக் கழகம், சென்னை ஆசியவியல் நிறுவனம், பழஞ்சுவடிகள் பாதுகாப்பு மையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், கிறிஸ்தவ இலக்கியக் கழகம், ஞாயிறு நூற்பதிப்புக் கழகம், வைணவ நூற்பதிப்புக்கழகம், தமிழ்ப் பதிப்பகம், தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், ஐந்திணை பதிப்பகம், வானதி பதிப்பகம், அமுத நிலையம், மணிவாசகர் பதிப்பகம்,