பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

பாவை வெளியீட்டகம், பாரி நிலையம் ஆகியவற்றின் வாயி லாகவும் சுவடிப்பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன.

இத்தனிச் சுவடிப்பதிப்புகளன்றி அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பருவ இதழ், உண்மை விளக்கம் அல்லது சித்தாந்த தீபிகை, உயராய்வு, கலாநிலையம், கலைமகள் சென்னை, கல்வெட்டு, குமரகுருபரன், கொங்கு மலர், சக்தி, சரஸ்வதிமகால் நூலகப் பருவ இதழ், சித்தாந்தம் (1912), சித்தாந்தம் (1928), சிவநேசன், செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, செல்வக் களஞ்சியம், ஞானசம்பந்தம், ஞானபோதினி, தமிழாய்வு, தமிழ்க்கலை, தமிழ்ப்பொழில், திருக்கோயில், தேனோலை, நல்லறம், பஞ்சாமிர்தம், புலமை, பைந்தமிழ், மாதாந்திர அமுதம், முக்குடை, மெய்கண்டார், விவேகபாநு, ஸ்ரீகாமகோடி ப்ரதீபம், ஸ்ரீகுமரகுருபரர், ஸ்ரீசங்கர க்ருபா, ஹரிசமய திவாகரன் போன்ற பருவ இதழ்களின் வாயிலாகவும் சுவடிப்பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன.

இந்நூல், இதழ்களில் வெளிவந்த சுவடிப்பதிப்புக்களை முதன்மை ஆதாரமாகக் கொண்டு ஏனைய பதிப்புகளைத் துணைக்கழைத்துப் பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு குறித்து விரிவாக ஆராய்கின்றது.

இதழியல்

-

ஒரு பார்வை என்னும் பகுதியில் இதழியலின் வரையறை, தொடக்க கால இதழியலின் தன்மை, இலக்கியங்களில் இதழ்கள் குறித்த செய்திகள், உலக அளவில் இதழியலின் தோற்றுவாய், இந்திய தமிழக இதழியலின் தோற்றுவாய், பருவ இதழ்களின் வகைப்பாடு, இந்தியாவில் நிலவி வந்த இதழியல் சட்டங்கள் குறித்த பல்வேறு செய்திகள் ஆராயப்பெற்றுள்ளன.

இலக்கியப் பருவ இதழ்கள் என்னும் பகுதியில் பார்வையிடப்பெற்ற பருவ இதழ்களில் சுவடிப்பதிப்புகளை வெளியிட்ட 36 பருவ இதழ்கள் ஆய்வுக்காகத் தெரிவுசெய்யப் பெற்றுள்ளன. அவை, அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பருவ இதழ், உண்மை விளக்கம் எனும் சித்தாந்த தீபிகை,