பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

7

உயராய்வு, கலாநிலையம், கலைமகள், கல்வெட்டு, குமர குருபரன், கொங்குமலர், சக்தி, சரஸ்வதிமகால் நூலகப் பருவ இதழ், சித்தாந்தம் (1912), சித்தாந்தம் (1928), சிவநேசன், செங்குந்தமித்திரன், செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, செல்வக் களஞ்சியம், ஞானசம்பந்தம், ஞானபோதினி, தமிழாய்வு, தமிழ்க்கலை, தமிழ்ப்பொழில், திருக்கோயில், தேனோலை, நல்லறம், பஞ்சாமிர்தம், புலமை, பைந்தமிழ், மாதாந்திர அமுதம், முக்குடை, மெய்கண்டார், விவேகபாநு, ஹரிசமய திவாகரன், ஸ்ரீகாமகோடி ப்ரதீபம், ஸ்ரீகுமரகுருபரர், ஸ்ரீசங்கர க்ருபா ஆகியவையாகும். இப்பருவ இதழ்கள் வெளியீட்டு நிலையில் தனியார்ப் பருவ இதழ்கள், தமிழ்ச்சங்கப் பருவ இதழ்கள், சுவடி நூலகப் பருவ இதழ்கள், நிறுவனப் பருவ இதழ்கள், ஆதீனப் பருவ இதழ்கள், பல்கலைக்கழகப் பருவ இதழ்கள் என்று ஆறு வகைகளாகப் பிரிக்கப்பெற்று அவ்வ வற்றின் தோற்றம், நோக்கம், போக்கு, அவற்றில் வெளியான சுவடிப்பதிப்புகள், நெறிமுறைகள் குறித்து சுட்டப்பெறுகிறது.

சுவடிப்பதிப்பு வரலாற்றில் பருவ இதழ்கள் என்னும் பகுதியில் சுவடிப்பதிப்பின் தோற்றம், மூன்று நிலைகளில் அமையும் சுவடிப்பதிப்பு வரலாறு மற்றும் பருவ இதழ்கள் வெளியிட்ட சுவடிப்பதிப்புகளின் வகைகள் ஆகியவற்றை ஆராய்வது இவ்வியலின் முக்கிய நோக்கமாகும். வெளியீட்டு நிலை மற்றும் உள்ளடக்க நிலையில் தனியார் பருவ இதழில் மூலச் சுவடிப்பதிப்புகள், மூலமும் குறிப்பும் கொண்ட சுவடிப்பதிப்புகள், மூலமும் உரையும் கொண்ட சுவடிப் பதிப்புகள், குறைச் சுவடிப்பதிப்புகள், தமிழ்ச் சங்கப் பருவ இதழில் மூலச் சுவடிப்பதிப்புகள், மூலம் குறிப்பும் கொண்ட சுவடிப்பதிப்புகள், மூலமும் உரையும் கொண்ட- சுவடிப் பதிப்புகள், திருத்தப் பதிப்புகள், குறைச் சுவடிப் பதிப்புகள், சுவடி நூலகப் பருவ இதழில் மூலச் சுவடிப் பதிப்புகள், மூலமும் குறிப்பும் கொண்ட சுவடிப்பதிப்புகள், மூலமும் உரையும் கொண்ட சுவடிப்பதிப்புகள், திருத்தப் பதிப்புகள், குறைச் சுவடிப்பதிப்புகள், ஆதீனப் பருவ இதழில் மூலச் சுவடிப்