பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

OQ

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

பதிப்புகள், மூலமும் குறிப்பும் கொண்ட சுவடிப்பதிப்புகள், திருத்தப் பதிப்புகள், குறைச் சுவடிப் பதிப்புகள், நிறுவனப் பருவ இதழில் மூலச் சுவடிப்பதிப்புகள், மூலமும் குறிப்பும் கொண்ட சுவடிப்பதிப்புகள், மூலமும் உரையும் கொண்ட சுவடிப்பதிப்புகள், திருத்தப் பதிப்புகள், குறைச் சுவடிப் பதிப்புகள், பல்கலைக்கழகப் பருவ இதழில் மூலச் சுவடிப் பதிப்புகள், மூலமும் குறிப்பும் கொண்ட சுவடிப்பதிப்புகள், மூலமும் உரையும் கொண்ட சுவடிப்பதிப்புகள், குறைச் சுவடிப்பதிப்புகள் போன்ற 27 வகைகளில் அமைந்த பருவ இதழ்ச் சுவடிப்பதிப்புகள் இனங்காணப்பெற்று ஆராயப் பெறுகிறது.

பருவ இதழ்களில் சுவடிப்பதிப்புகள் எனும் பகுதியில் பருவ இதழ்களில் வெளிவந்த சுவடிப்பதிப்புகளைப் பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பிற்கு முன்-பின் தனிநூற் பதிப்புகள், தனிநூற் பதிப்பிற்குப் பின் பருவ இதழ்ச் சுவடிப்பதிப்புகள், பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பிற்குப் பின் தனிநூற் பதிப்புகள், பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பின் தனிநூற்பதிப்புகள், பருவ இதழ்ச் சுவடிப்பதிப்புகள், நூலிதழ்ச் சுவடிப்பதிப்புகள் என்றவாறு பகுத்துக்கொண்டு சுவடிப்பதிப்புகள் இனங்காணப் பெற்றுள்ளன.

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்புகளின் வகையும் வடிவும் எனும் பகுதியில் பருவ இதழ்களில் வெளிவந்து பருவ இதழ்ப் பதிப்பாகவே உள்ள சுவடிப்பதிப்புகள் இனங்காணப்பெற்று, அவற்றின் வகையும் வடிவும் குறித்து இப்பகுதி ஆய்வு செய்கிறது. இவற்றின் வகைகளாகக் காப்பியம், புராணம், தத்துவம், நீதி இலக்கியம், இலக்கணம், சிற்றிலக்கியம் (அகவல், அட்டகம், அட்டமங்கலம், அந்தாதி, அனுபூதி, ஆற்றுப்படை, ஆனந்தக் களிப்பு, உலா, ஊசல், ஊடல், கண்ணி, கலித்துறை, காதல், கும்மி, குறவஞ்சி, கோவை, சதகம், சிந்து, தாலாட்டு, திருவனந்தல், துதி (தோத்திரம்), தூது, நலங்கு, நொண்டி நாடகம், பஞ்சகம், பதம், பதிகம், பத்து, பரணி, பள்ளு, பாட்டு, பிள்ளைத்தமிழ், மஞ்சரி, மடல், மாலை, வகுப்பு,

J